இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்க அமெரிக்கா தீர்மானம்

அனைத்துலக நாணயநிதியத்துடன் பொருளாதார மறுசீரமைப்பு உடன்பாடு எட்டப்பட்டால் அமெரிக்காவும் இலங்கைக்கான உதவிகளை வழங்கும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சொங் தெரிவித்துள்ளார்.

பசளை, தானியங்கள், கல்வி மற்றும் பயிற்சி போன்ற வழிகளில் அமெரிக்கா உதவிகளை வழங்கும். அமெரிக்கா மற்றும் இலங்கைக்கான வர்த்தக சபையுடன் நான் பேச்சுக்களை மேற்கொண்டுள்ளேன். அதன் மூலம் இரு நாடுகளினதும் வர்த்தகத்தை மேம்படுத்த முடியும்.

அமெரிக்காவுக்கான ஏற்றுமதிகளை மேற்கொள்ளும் முகமாக 180,000 வேலைவாய்ப்புக்களை நாம் ஏற்கனவே இலங்கைக்கு வழங்கியுள்ளோம். அதன் மூலம் பில்லியன் ரூபாய்களை இலங்கை பெறமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.