இரு முஸ்லீம் மக்கள் படுகொலை, 30 கிராமங்கள் மீது தாக்குதல் – அமைச்சர்களை பதவி விலகுமாறு கோரிக்கை

சிங்கள இனத்தவர்களின் வன்முறைகளை தவிர்ப்பதற்காக சிறீலங்கா அரசு அவசரமாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்திய போதும் தென்னிலங்கையில் வன்முறைகள் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற தாக்குதலின் போது இரு முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மினிவாங்கொடையைச் சேர்ந்த பௌஸீல் ஹமீட் (40) மற்றும் கொட்டருமுல்லையைச் சேர்ந்த அமீர் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

வீடுகளினுள் புகுந்த சிங்கள வன்முறையாளர்கள் அவர்களை அடித்தும் வெட்டியும் படுகொலை செய்துள்ளனர்.

இதனிடையே குருநாகல் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் வன்முறைகளில் இதுவரை 9 பள்ளிவாசல்கள் சேதமடைந்துள்ளதுடன், 30 முஸ்லீம் கிராமங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

மாளிகாவத்தை பகுதியில் உள்ள முஸ்லீம் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு முஸ்லீம் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள அதேசமயம் கொழும்பில் மயான அமைதி நிலவுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் முஸ்லீம் அமைச்சர்களை பதவி விலகுமாறு முஸ்லீம் சமூகம் கடுமையான அழுத்தங்களை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

kurunagal5 இரு முஸ்லீம் மக்கள் படுகொலை, 30 கிராமங்கள் மீது தாக்குதல் - அமைச்சர்களை பதவி விலகுமாறு கோரிக்கை