இராணுவமயப்படுத்தப்பட்ட கோவிட்-19 நடவடிக்கை – சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம்

கோவிட் 19 இற்கான இலங்கையின் இராணுவமயப்படுத்தப்பட்ட பதில் நடவடிக்கைக்கு பொதுமக்கள் மேற்பார்வை போதாமல் இருப்பது சில பாரதூரமான மனித உரிமைகள் பற்றிய கரிசனைகளை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.

“கோவிட் 19 இற்கான பதில் நடவடிக்கையினை ஜனாதிபதி இருந்த அதே இராணுவப்படையணியிலே கடமையாற்றிய இலங்கையின் போர்க் குற்றவாளி ஒருவர் தலைமை தாங்குகின்றமையானது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் மேற்பார்வை செய்தல் பற்றிய கேள்விகளை எழுப்புவதாக அடைக்கப்பட்ட சூழ்நிலையில் உள்ள சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 அவசர காலநிலையைக் கையாள்வதற்கு மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் சட்டம், விகிதசமம் மற்றும் பாரபட்சமின்மை போன்ற கோட்பாடுகளைக் கொண்டு வழிநடத்தப்பட வேண்டும் என நீதிக்குப்புறம்பான மற்றும் உடனடி அல்லது எழுமாற்றான கொலைகளுக்கான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி அக்னஸ் கொலமாட் தெரிவித்துள்ளார். இவ்வாறான நெருக்கடிநிலைமையை சிவிலியன் மேற்பார்வையின்றி கையாள்வதற்கு இராணுவ
நபரை நியமித்தமையானது இலங்கைக்கோ அல்லது குறிப்பாக முஸ்லீம்களாக உள்ள கோவிட் 19 நோயாளிகளை அடையாளங்காணும் லெப் ஜெனரல் சவேந்தில சில்வாவிற்கோ சாதகமான விளைவுகளை ஏற்படுத்தப்போவதில்லை.

இராணுவம் இல்லாது, சிவில் சேவையில் அனுபவமிக்க அதிகாரி பொதுச் சுகாதாரம் மற்றும் பகிர்ந்தளிப்பு தொடர்பான சிக்கலான விடயங்களை ஒருங்கிணைப்பதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும் என ஜஸ்மின் சூக்கா தெரிவித்தார், மக்களின் உயிர்களும் அத்துடன் சமமாக பகிர்ந்தளிக்கப்படவேண்டிய பெருந்தொகையான பணம் மற்றும் விநியோகப் பொருட்கள் என்பனவும் ஆபத்தில் உள்ளன. பொதுமக்கள் கைது செய்யப்படுவீர்கள் என அச்சுறுத்தப்படாமல் இந்த பதில் நடவடிக்கை பற்றி கேள்வி கேட்பதற்கு அனுமதிக்கப்படுதல் மிகவும் அவசியமானதாகும். இந்த நெருக்கடி நிலையானது சிவில் உரிமைகள் மேலும் அழிப்பதற்கான ஒரு சாட்டாக மாறிவிடக் கூடாது.

எது சிறந்த பொதுச்சுகாதார நடவடிக்கைகளாக இருக்க வேண்டும் என்பது தொடர்பில் மருத்துவ அதிகாரிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே ஏற்கனவே மோதல்கள் உள்ளன. நாட்டினுடைய முழுமையான கோவிட்19 இற்கான பதில் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக ஒரு இராணுவத்தளபதியை அரசாங்கள் நியமித்தமை பற்றி அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூட ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளது.

கோவிட் 19 பரவுவதைப் தடுப்பதற்கான தேசிய நடவடிக்கைகள் மையம்

கோவிட் 19 வைரஸ் பரவுவதை தடுத்தல் மற்றும் கையாளுதல் மற்றும் சுகாதர விநியோகங்கள் மற்றும் ஏனைய பொதுச் சேவைகள் என்பன புதிதாக உருவாக்கப்பட்ட தேசிய நடவடிக்கைகள் மையத்தினால் நிர்வகிக்கப்படவுள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது. இந்த மையத்தில் பணி செய்யக்கூடியதாக அனைத்து ஏனைய அதிகாரிகளும் இருக்க வேண்டும்.

எவ்வாறாயினும் தேசிய நடவடிக்கைகள் மையமானது இலங்கையினுடைய
இராணுவத்தளபதியாகவும் மற்றும் பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியுமாக உள்ள லெப் ஜெனரல் சவேந்திர சிலவாவினால் தலைமை தாங்கப்படுகின்றது. கட்டளைப் பொறுப்புக்கு ஊடாக நீதிக்குப் புறம்பான கொலைகள் எனப் பெயரிடப்பட்ட பாரிய மனித உரிமைகள் மீறல்களில் அவருடைய பங்கு தொடர்பான நம்பத்தகுந்த தகவல்கள் காரணமாக அமெரிக்க வெளிநாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சில்வா அவர்கள் பகிரங்கமாகவே தடைசெய்யப்பட்டார். சில்வா அதிகாரம்வாய்ந்த இந்த கோவிட் 19 பணிக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார். கோத்தபாஜ ராஜபக்ச 1989 இல் இரண்டாவது சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியினை நசுக்குவதற்கான இராணுவ நடவடிக்கையின் போது மாத்தளையில் கஜபாகு படையணியின் முதலாவது பட்டாலியனில் இவரது உயர் அதிகாரியாக இருந்தார்,

இதன்போது இவர்களது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இந்த பிரதேசத்தில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் காணாமற்போயிருந்தார்கள். அமெரிக்க அரசாங்கம் சில்வாவை போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டும் 2008 2009 காலப்பகுதியில் அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டபாய ராஜபக்சவிடமிருந்து அவர் நேடடியாகவே கட்டளைகளைப் பெற்றுக்கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

மேலும் ஏனைய கோவிட்19 அமைப்புகளுக்கானது போல் கோவிட்19 தேசிய நடவடிக்கைகள் மையத்தினை அமைப்பதற்கு எந்த வர்த்தமானி அறிவிப்புக்களும் இருக்கவில்லை என்பதால் இறுதியாக இடம்பெற்ற இந்த நியமனத்திற்கான சட்ட ரீதியான அடிப்படைகள் தெளிவானதாக இல்லை. இது முன்னாள் இராணுவ அதிகாரியாக இருந்த அவரது நண்பரான ஜனாதிபதியினை விட சிவில் நிர்வாகத்தில் சவேந்திர சில்வாவினைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துபவர் யார் என்பது பற்றிய கேள்வியை எழுப்புகின்றது. நோய்பரவல் தொடர்பான ஊடக மாநாடுகள் சவேந்திர சில்வாவினாலே ஆதிக்கம் செலுத்தப்படுவதுடன் அவர் தனிமைப்படுத்தல் சூழ்நிலை பற்றியே விள்ளக்கமளிக்கின்றார்.

உணவு வழங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி செயலணி

இந்த நெருக்கடியின் போது நாட்டு மக்களுக்கு உணவு வழங்குவதை உறுதிப்செய்து கொள்வதற்காக மார்ச்சில் ஜனாதிபதியினால் இது வர்த்தகமானி மூலம் அறிவி;க்கப்பட்டது. இந்த செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையும் அதிகாரங்களும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் விநியோகிப்பதில் இருந்து சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கைகள் என வரையறை எல்லை மற்றும் வீச்சு என்பவற்றில் மிகவும் அதிகமானவை என மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் ஒரு விரிவான ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

இந்த செயலணியானது தேர்தலில் தெரிவு செய்யப்படாத ஜனாதிபதியின் சகோதரரான பசில் ராஜபக்சவினால் தலைமை தாங்கப்படுவதுடன் இராணுவதால் மேற்கொள்ளப்பட்ட பரவலான சர்வதேச சட்ட மீறல்களைக் கண்ட 2009 இலங்கையின் போரில் சம்பந்தப்பட்ட ஜனாதிபதிக்கு நெருக்கமான பெரும் எண்ணிக்கையான ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளையும் (அவரது கஜபாகு படையணியைச் சேர்ந்த அதிகாரிகள் உட்பட) கொண்டுள்ளது. முக்கிய அரசாங்கப் பணிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்தமையானது சர்ச்சைக்குரியதானதாகவே இருந்துள்ளது உதாரணமாக மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய சுங்கப் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டமையானது சுங்க, வர்த்தக சங்கங்களால் எதிர்க்கப்பட்டதுடன் இந்தப் பதவி சிவில் நிர்வாகத்தில் எந்த அனுபவமும் இல்லாத ஒரு இராணுவ அதிகாரிக்கு போகக் கூடாது என்றும் தமது சொந்த திணைக்களத்தைச் சேர்ந்த ஒரு சிவில் அதிகாரிக்கே செல்ல வேண்டும் எனக் கூறினார்கள். ஜனாதிபதியின் செயலாளர் டீ ஜெயசுந்தர ஊழலைக் கட்டுப்படுத்தவே ஒரு இராணுவ அதிகாரியை நியமித்ததாக தெரிவித்திருந்தார்.

அதிர்ச்சிதரும்வகையில் 2008 இல் ஜெயசுந்தரவே ஒரு தனியார் கூட்டுத்தாபனத்திற்கு மிகவும் குறைவான ஒரு விலையில் வருமானம் தரும் ஒரு அரசாங்க சொத்தை சட்டத்திற்குப் புறம்பான வகையில் விற்பனை செய்தமைக்குப் பொறுப்பாக இருந்தார் என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் திறைசேரியின் செயலாளர் பதவியில் இருந்து பதவி விலகவேண்டியிருந்தது ஆனால் ஒரு வருடத்தின் பின்னர் அப்போது ஜனாதிபதியாக இருந்த தற்போதைய ஜனாதிபதியின் சகோதரரான மகிந்த ராஜபக்சவினால் அந்த பதவியில் மீண்டும் அமர்த்தப்பட்டார்.

இதைவிட, நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவரான ஜனாதிபதியின் கஜபாகு படைப்பிரிவினைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் னு.ஆ.ளு திசநாயக்கா (சாந்த திசநாயக்கா) கோவிட் 19 அழிவினைப் பயன்படுத்தி இலாபமீட்டிய ஒரு வர்த்தகரை நான் உன்னுடைய காதுகளை பிய்ப்பேன் என கூறி அச்சுறுத்தும் போது அண்மையில் ஒரு கமராவில் அகப்பட்டார். மேலும், 2012 இல் வெலிக்கட சிறையில் இடம்பெற்ற சம்பவம் பற்றிய விசாரணை ஆணைக்குழுவானது 27 சிறைக் கைதிகள் கொல்லப்பட்ட வெலிக்கட சிறைப் படுகொலையில் அவரது பங்கிற்காக இலங்கை தண்டனைச் சட்டத்தின் 162 ஆவது பிரிவின் கீழ் திசாநாயக்காவையும் அவருடன் கோத்தபாய ராஜபக்சவையும் குற்றஞ்சுமத்துமாறு சிபார்சு செய்தது. இருவரும் குற்றஞ்சுமத்தப்படவில்லை.

கோவிட்19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச 23 மார்சில் இந்த நிதியத்தை நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட கொடையாளிகளிடம் இருந்து நேரடி பண வைப்புக்களையும் நன்கொடைகளையும் பெற்றுக்கொள்வதற்கு உருவாக்கினார். 07 ஏப்பிரல் இல் இந்த நிதி 420 மில்லியன் இலங்கை ரூபாயினை எட்டியது (2.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள்). மேலதிக விபரங்கள் நிர்வாக இயக்குநரான திரு மு.டீ ஏகொடவெல இடமிருந்து பெய முடியும் என ஜனாதிபதியின் இணையத்தளம் கூறுகின்றது. எகொடவெல ஒரு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி அத்துடன் முன்னர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடன் அவன்ட் கிறேட் (Avant Garde) ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் ஆனால் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியாக ஏற்கனவே நியமிக்கப்பட்ட பின்னர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

சிவிலியன் மேற்பார்வைக்கான அழைப்புகள்

பொதுத்துறைப் பணியினை பிரதிநிதித்துவம் செய்யும் இருபது முன்னணி வர்த்தக சங்கங்கள் கோவிட்19 தடுப்பினை ஒரு சிவில் அதிகாரியின் கீழ் கொண்டுவருமாறு அழைப்பு விடுத்து ஜனாதிபதிக்கு அண்மையில் எழுதியிருந்தார்கள். 18 மார்ச் கூட்டறிக்கையில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது:

“இது போன்றதொரு தேசிய அழிவு ஏற்படும் நிலைமையில் ஒரு தேசிய நடவடிக்கை மையமானது விசேட பயிற்சியுடன் கூடிய ஒழுங்குமுறை அதிகார சபையான பேரழிவு முகாமைத்துவ மையத்தின் கீழ் உருவாக்கப்பட வேண்டும். அனைத்து பொதுச் சேவைகளும் அந்த நிலையத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம்.

இதற்கிடையில் ஏப்பிரல் 04 – ஏப்பிரல் 11 சம்பவங்கள் உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படும் நிலைமையை எதிர்கொள்வதற்கு தனியார் மற்றும் அரச சுகாதார சேவைகளை ஒன்றாக்குவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரின் கீழ் பொறிமுறையொன்று இருக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிவரமசிங்க ஒரு வாரத்திற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

மத ரீதியான வெறுப்பு

இந்த நெருக்கடி நிலைமையானது குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக மத ரீதியான வெறுப்புணர்வை தூண்டுவிடுவதற்கு தவறாகப் பயன்படுத்தப்படலாம் என இலங்கையிலுள்ள பல அமைப்புக்கள் கரிசனை வெளியிட்டுள்ளன.

முஸ்லீம்களுக்கு எதிரானவை எனப் பெயர்போன பொது பல சேனா போன்ற சிங்கள பௌத்த தீவிரவாத அமைப்புகளுக்கு கோட்டபாய ராஜபக்ச நெருக்கமானவர் என்பதன் அடிப்படையில் இந்த கரிசனை உள்ளது. 26 வர்த்தக சங்கங்களால் மேற்கொள்ளபட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளதாவது: கோரணா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்கள் பற்றி தகவல்களை அறிவிக்கும் போது இன உணர்வுகளைத் தூண்டக்கூடிய வகையில் மக்கள் மதம் மற்றும் இன அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றார்கள் என்பது வெளிப்படை கொரணா நோயாளிகள் மற்றும் அதனால் இறந்தவர்கள் பற்றி அறிக்கைகள் மேற்கொள்ளும் அரசாங்க அதிகாரிகள், அரசாங்க அமைச்சர்கள் மற்றும் எல்லா அரசியல்வாதிகளும் இந்த பொதுகொள்கைகளை பின்பற்ற வேண்டும் என எமது வர்த்தக சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தணிக்கை

அரசாங்க அதிகாரிகளை விமர்சித்து சமூகவலைத் தளங்களில் பதிவுகளை மேற்கொள்பவர்களை கைது செய்து சட்டநடவடிக்கை எடுக்குமாறு குற்றவியல் விசாரணைப் பிரிவினைச் சேர்ந்த பொலிசார் மற்றும் அனைத்து அதிகாரிகளையும் பிரதி பொலிஸ்மா அதிபர் விக்கிரமரத்ன அறிவுறுத்தியுள்ளார். ஏப்பிரல் 01 இல் வெளியிடப்பட்ட பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது இணையத்தளத்தில் போலியான அல்லது தீங்கிழைக்கும் அறிக்கைகளை வெளியிடுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை.

இது கருத்துச் சுதந்திர உரிமையை மீறுவதாக உள்ளது என செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளர். 04 ஏப்பிரல் ஏழு ஊடக அமைப்புக்களால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை தொற்று நோய் காலப் பகுதியில் பொய் செய்திகள் அல்லது தவறான தகவல்கள் மிகவும் தீங்கானது என ஏற்றுக் கொண்டுள்ளது ஆனால் நியாயமான விமர்சனம் என்பது ஒரு உரிமை அத்துடன் அரசாங்க அதிகாரிகள் ஒரு தவறினைச் செய்தால் மக்கள் தமது கருத்துக்களை இணையத்தில் வெளியிடக்கூடியதாக இருக்கும் என மேலும் தெரிவித்துள்ளது. 07 ஏப்பிரலில் 46 தனிநபர்களாலும் 09 அமைப்புக்களாலும் கையொப்பமிடப்பட்டு பாதுகாப்பு செயலாளருக்கு பிரதி இடப்பட்டு பிரதி பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அரசை விமர்சிப்பவர்களை கைது செய்வதற்கு அதிகாரமளிக்கும் சரத்துக்கள் எதுவும் சட்டத்தில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அச்சமும் குழப்பமும் கொண்ட முன்னொருபோதும் இல்லாத இந்தக் காலப் பகுதியில் பல அரசாங்கங்கள் உரிமைகளை அடிப்படையாக கொண்ட ஒரு பதில் நடவடிக்கை என்பதை விட கோவிட்19 நெருக்கடிக்கு ஒரு பொதுவான அவசரகால நடவடிக்கை ஒன்றினை ஆராய்வதில் கவனம் செலுத்துகின்றன. உரிமைகளை அடிப்படையாக கொண்ட ஒரு அணுகுமுறைக்கு மனித உரிமைகள் மற்றும் சட்ட ஆட்சியினை முன்னிலைப்படுத்தும் ஒரு கட்டமைப்பு அவசியமாகும்,

என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கம் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீதான ஒவ்வொரு கட்டுப்பாடும் மக்கள் எந்தச் சட்டத்தின் கீழ் தமது உரிமைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன அத்துடன் சரியாக தாம் என்ன செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றோம் (மற்றும் அனுமதிக்கப்படவில்லை) என்பதனை தெரியப்படுத்தக் கூடியதாக குறிப்பிட்ட சொற்பதற்களில் விபரிக்கப்பட்ட ஒரு தெளிவான சட்ட அடிப்படையைக் கொண்டது. மட்டுப்படுத்தல் அல்லது கட்டுப்பாடு நீதிமன்றங்களின் மீள்பார்வைக்கே உட்படுத்தப்பட வேண்டும், என அவர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பதில் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் சிவில், கட்சி சாரா சுயாதீனமான ஒரு பதில் நடவடிக்கை ஆணைக்குழுவினை அமைக்குமாறும், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு தாம் விரும்பும் எதையும் செய்வதற்கு இராணுவம் மற்றும் பொலிசார் அனுமதிக்கப்படக் கூடாது எனவும் நாம் இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்புவிடுக்கின்றோம். விசேடமாக ஏற்கனவே மதிப்பிழந்த அதிகாரிகளின் கள்ளத்தனமான நடவடிக்கைகள் மூலம் இராணுவக்கட்டுப்பாட்டை அமுல்ப்படுத்த கோவிட்19 இனை ஒரு சாட்டாக பயன்படுத்தக்கூடாது, என சூக்கா கருத்து தெரிவித்துள்ளார்.

முற்றும்

அறிக்கையை பார்வையிட இங்கு அழுத்தவும்:

சர்வதே உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்ட அறிக்கை