இனப்படுகொலை நடப்பதாக தென்னாபிரிக்கா மீது ட்ரம்ப் பாய்ச்சல்

தென்னாபிரிக்காவில் வெள்ளையின மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்ப் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை(21) இடம் பெற்ற சந்திப்பின் போது தென்னா பிரிக்க அரச தலைவர் சிறில் ரமபோசாவுக்கு தெரிவித்தது தென்னாபிரிக்கத்தலைவரைஅதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வாரம் தென்னாபிரிக்காவில் இருந்து 59 அமெரிக்கர்கள் அகதிகளாக அமெரிக்காவுக்கு வந்த
தாகவும், பெருமளவான வெள்ளை யின மக்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாகவும், வெள்ளையினத்தை சேர்ந்த விவசாயிகள் துன்புறுத் தப்படுவதுடன், அவர்களின் நிலங் கள் பறிக்கப்படுவதாகவும் ட்றம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால் தென்னாபிரிக்காவில் கொல் லப்படும் மக்களில் பெருமளவானவர்கள் கறுப் பின மக்கள் எனவும், அது அங்கு இடம்பெறும் குழு மோதல்களால் ஏற்படுவதே தவிர அரசியல் கார ணங்களுக்காக அல்ல எனவும் ரமபோசா தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் கூறுவது தவறானது அங்கு இனப்படுகொலை இடம்பெறுவதில்லை, தென்னாபிரிக்கா மிகவும் வன்முறை மிகுந்த நாடு. மக்களிடம் ஏற்றத்தாழ்வு இருக்கின்றது. அதுவே அங்கு கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் இடம்பெற காரணம் என பிரித்தானியாவின் கேம்பிறிச் பல்கலைக்கழகத்தின் பொதுநலவாய நாடுகளின் வரலாறு தொடர்பான பேராசிரியர் சவுல் டுபோவ் தெரிவித்துள்ளார்.
காசாவில் இடம்பெறும் இனப்படு கொலை தொடர்பில் தென்னாபிரிக்கா ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக நீதிமன்றத்தில் வழக்கை பதிவு செய்தது, பிறிக்ஸ் என்ற அமைப்பில் இருப்பது மற்றும் உக்ரைன் போரில் உக்ரைனக்கு ஆதரவாக இல்லாததே அமெரிக்க அதிபரின் இந்த சீற்றத்திற்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.