இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவால் சீனாவுக்கு ஆபத்து

தாய்வான் போர் ஆரம்பித்தால் இந்துசமுத்திர பிராந்தியத்தால் செல்லும் சீனாவின் எண்ணைக்கப்பல்களை அமெரிக்கா கைப்பற்றும் சாத்தியங்கள் உள்ளதாக அவுஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் டேவிட் புறுவ்ஸ்ரர் தெரிவித்துள்ளார்.

தினமும் 60 எண்ணைக் கப்பல்கள் பாராசீக வளைகுடா ஊடாக சீனாவின் துறைமுகங்களுக்கு செல்கின்றன. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார வல்லரசின் எரிபொருள் தேவையின் அரை பங்கினை அது நிறைவு செய்கின்றது.

தென்சீனக்கடலில் அவற்றை பாகுப்பதற்கு தேவையான ஏவுகணைகள் மற்றும் தாக்குதல் கப்பல்களை அது கொண்டுள்ளது. ஆனால் ஆபிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் இருந்து வரும் கப்பல்கள் இந்து சமுத்திரத்தை கடக்க வேண்டும்.

போர் ஒன்று ஏற்படுமானால் இந்த கப்பல்கள் ஆபத்துக்களை சந்திக்கும். வான்படையின் உதவிகள் இன்றி உதவிக்கு விரையும் சீனாவின் கடற்படைக் கப்பல்கள் பொறியில் சிக்கலாம். 2 மில்லியன் பரல்கள் அளவான எரிபொருட்களை எடுத்துச் செல்லும் கப்பல்கள் கைப்பற்றப்படலாம் அல்லது மூழ்கடிக்கப்படலாம். எனவே தான் சீனா இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் தனது கவனத்தை செலுத்தி வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.