இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் பிரித்தானியாவின் நிதி அமைச்சராகிறார்.

பிரிட்டன் புதிய நிதியமைச்சராக இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் நியமிக்கப்பட்டுள்ளார்.பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் மாற்றங்களை செய்து வருகிறார், இதில் நிதியமைச்சராக இந்திய வம்சாவளி அரசியல்வாதி ரிஷி சுனக்கை அவர் புதிய நிதியமைச்சராக நியமித்துள்ளார்.

டிசம்பர் 2019 தேர்தல் போரிஸ் ஜான்சன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதையடுத்து பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாஜித் ஜாவித் ராஜினாமா செய்தது அங்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சாஜித் ஜாவித் பதவியில் நீடிக்க வேண்டுமென்றால் தனது 5 ஆலோசகர்களையும் நீக்க வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் நிபந்தனை வைத்தார், ஜாவித் அந்த நிபந்தனையை ஏற்க மறுத்து ராஜினாமா செய்தது பிரிட்டன் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஹாம்ப்ஷயரில் பிறந்த ரிஷி சுனக்கிற்கு வயது 39. யார்க்‌ஷயர் ரிச்மோண்ட் எம்.பி.யாக ரிஷி 2015-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். உள்நாட்டு அரசில் அவர் ஜூனியர் அமைச்சராக இருந்தவர் கடந்த ஆண்டு கருவூல தலைமைச் செயலராகப் பதவி உயர்வு பெற்றார்.

ரிஷி சுனக், இன்போசிஸ் நிறுவன இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்‌ஷதாவைத் திருமணம் செய்து கொண்டார். ரிஷி சுனக், போரிஸ் ஜான்சனின் பிரெக்ஸிட்டை பெருமளவு ஆதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.