இந்தியா மேற்கொண்ட இனப்படுகொலையின் 36-வது நினைவேந்தல்

கொக்குவில் பிரம்படி பகுதியில் இந்திய இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலை நினைவேந்தல் கடந்த வியாழக்கிழமை(12) காலை 9மணிக்கு பிரம்படி நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இந்திய இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களை தொடர்ந்து இலங்கை இந்திய உடன்பாட்டின் அடிப்படையில் அமைதிகாக்க வந்த இந்திய படையினர்அப்பாவி தமிழ் மக்கள் மீது வன்முறைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்திய இராணுவத்தின் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு மற்றும் எறிகணை வீச்சக்களால் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த பகுகொலைகளில் முக்கியமானது கொக்குவில் பிரம்படி வீதி படுகொலை.

வீடுகளில் இருந்த அப்பாவித் தமிழ் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், வீதிகளில் இழுத்துவரப்பட்டு போர் டாங்கிகளால் ஏற்றியும் கொல்லப்பட்டிருந்தனர். இந்திய இராணுவம் மேற்கொண்ட இந்த தாக்குதல்களில் தமிழீழம் எங்கும் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.