இந்தியாவை திருப்திப்படுத்துவதில் காேத்தபாயா அதிக ஆர்வம்

இந்தியப் பிரதமரின் அழைப்பையேற்று வரும் 29 ஆம் திகதி இந்தியா செல்லும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னுடன் எட்டுப் பேரை மாத்திரமே அழைத்துச் செல்லவுள்ளார் .

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர ,முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ,,வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவினாத ஆரியசிங்ஹ பாதுகாப்பு அதிகாரிகள் 3 பேர் ஆகியோர் செல்லும் குழுவில் அடங்குகின்றனர்.

புதுடில்லியில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் கோட்டா ,அங்கு இந்தியப் பிரதமர்,வெளிநாட்டமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்களை சந்திக்கவுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களையும் அவர் சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் கோட்டாபய ராஜபக்ச தலைமைதாங்கும் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை நடைபெறவுள்ளது.அதன்போது தமது இந்திய விஜயம் குறித்தும் அங்கு பேசப்படவுள்ள விடயங்கள் பற்றியும் ஜனாதிபதி அமைச்சர்மாருக்கு விளக்கவுள்ளார்.