இடம் பெயர்ந்துள்ள யாழ். மாவட்ட மக்களுக்கு காணிகள்

யாழ். மாவட்டத்தில் நீண்ட காலமாக உள்ளக ரீதியில் இடம்பெயர்ந்துள்ள மற்றும் காணியற்ற மக்களுக்கு வீடுகளை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

தேசிய கொள்கை பொருளாதார அலுவல்கள் மீள்குடியமர்வு மற்றும் புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன் கீழ் யாழ். மாவட்டத்தில் நீண்ட காலமாக உள்ளக ரீதியில் இடம்பெயர்ந்த மற்றும் காணி அற்றவர்கள் என பதிவு செய்யப்பட்ட 535 குடும்பங்களில் 250 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படவுள்ளது.

அதற்கமைய நன்கொடையாளர்களினால் கொள்வனவு செய்யப்பட்டு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள 7.5 ஏக்கர் அளவிலான காணியைக் கொண்ட யாழ். பிரதேச செயலர் பிரிவிலுள்ள இல 88 கிராம உத்தியோகர் பிரிவில் புதிய சோனகத் தெரு, வண்ணார்பண்ணையிலுள்ள இராசாளி குளங்கரை என்னும் தனியார் காணியில் இருமாடி இரட்டை வீடமைப்பு கட்டடத் தொகுதியொன்றில் வீடொன்று தலா 600 அடி சுற்றளவைக் கொண்ட வகையில் 250 வீடுகளைக் கொண்ட கட்டுமானம் நிர்மாணிக்கப்படவுள்ளது.