ஆஸ்திரேலியா வழியில் இங்கிலாந்து: அகதிகளை தனித்தீவுக்கு அனுப்ப திட்டமா?

இங்கிலாந்துக்குள் படகு வழியாக வரும் குடியேறிகளையும் அகதிகளையும் சமாளிக்கும் விதமாக, இங்கிலாந்திலிருந்து 6 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள தீவில் தடுப்பு மையத்தை அமைப்பதற்கு இங்கிலாந்து தரப்பில் ஆலோசனை நடந்ததாகக் கூறப்படுகின்றது.
இது ஆஸ்திரேலிய வழியில் படகு வழியாக வருபவர்களை சமாளிக்கும் முயற்சியாக கருதப்படுகின்றது. சமீபத்தில், முன்னாள் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபேட் இங்கிலாந்துக்கான வர்த்தக ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அந்த வகையில், கடல் கடந்த தடுப்பு முகாமை அமைப்பது தொடர்பான இங்கிலாந்தின் சிந்தனை இவரது செல்வாக்கில் வந்திருக்கக்கூடும் என பினான்சியல் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
அதே சமயம், குடியேறிகள் மற்றும் அகதிகளை அங்கு இடமாற்றுவது நடைமுறை சிக்கல்கள் உள்ளதால் அந்த எண்ணத்தை இங்கிலாந்து தரப்பு தற்போது கைவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.