நைஜீரியாவின் நோய் கட் டுப்பாட்டு மையம் கடந்த திங்கட்கிழமை (21), நாட்டில் அதிகரித்து வரும் லாசா காய்ச்சல் பரவல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நோய் 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் குறைந் தது 800 தொற்றுகளையும் 151 இறப்புகளையும் ஏற்படுத்தியுள் ளது.
X தளத்தில் வெளியிடப் பட்ட நிறுவனத்தின் 27வது வார தொற்றுநோயியல் அறிக்கையின் படி, இறப்பு விகிதம் 18.9% ஆக உயர்ந்துள்ளது; இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 17.3% ஆக இருந்தது.
லாசா காய்ச்சல் என்பது மேற்கு ஆபிரிக்காவில் சில பகுதிக ளில் காணப்படும் ஒரு கடுமையான வைரஸ் இரத்தக்கசிவு நோயாகும். இந்த வைரஸ் முதன்முதலில் 1969 இல் நைஜீரியாவில் அடையாளம் காணப்பட்டது. இது எலிகளின் சிறுநீர் அல்லது மலத்தால் மாசு பட்ட உணவு அல்லது வீட்டுப் பொருட்களுடன் தொடர்பு கொள் வதன் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவும் வாய்ப்பும் உள்ளது; குறிப்பாக தரம் குறைந்த சுகாதாரத் தொற்று கட்டுப்பாட்டு நட வடிக்கைகள் உள்ள நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
லாசா காய்ச்சல் முதலில் தொண்டை வலி, தசை வலி, இருமல், குமட் டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளி ட்ட காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஆரம்பமாகிறது. பின்னர், இது முகம் வீக்கம், நுரையீரலில் திரவம் சேருதல் மற்றும் வாய், மூக்கு மற்றும் உடலின் பிற பகுதிகளிலிருந்து இரத்தப்போக்கு ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.
2024 ஆம் ஆண்டில், நைஜீரியாவில் குறிப்பிடத்தக்க லாசா காய்ச்சல் பரவல் ஏற் பட்டது; மொத்தம் 1,309 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் மற்றும் 214 இறப்புகள் ஏற்பட்டி ருந்தன. மருத்துவமனை முயற்சிகளால் மட்டும் லாசாவை எதிர்த்துப் போராட முடியாது. இந்த நோய் எவ்வாறு பரவுகிறது என்பதையும், குறிப்பாக எலிகளின் சிறுநீர் அல்லது மலம் மூலம் பரவுவதைத் தடுக்கும் முறைகள் பற்றியும், மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள சமூகங்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டும் என மருத்துவ அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
தாமதமான நோயறிதல், மருந்து பற்றாக்குறை மற்றும் தனிமைப்படுத்தும் பிரிவு கள் இல்லாதவை ஆகியவை இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான முக்கிய தடைகளாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.