நாட்டின் அவசரகால சட்டம் குறைந்தது இன்னும் 2 மாதங்களுக்காவது அமுல்படுத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (16) உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் டிட்வா சூறாவளியினால் இடம்பெயர்ந்த சிலரை அரசாங்கம் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டியிருப்பதால் இது அவசியம் என்று அவர் கூறினார்.
மேலும் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்குத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒப்புதல் அவசியம் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.



