அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியை சுவீகரிக்க இராணுவம் முயற்சி: மக்களின் எதிர்ப்பால் அளவீட்டு பணிகள் நிறுத்தம்

IMG 20240118 WA0029 அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியை சுவீகரிக்க இராணுவம் முயற்சி: மக்களின் எதிர்ப்பால் அளவீட்டு பணிகள் நிறுத்தம்முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியின் அளவீட்டு பணிகள் பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த காணியினை தனிநபரிடமிருந்து சுவீகரித்து இராணுவத்துக்கு வழங்கும் விதமாய் நில அளவீட்டு பணிகள் இன்றைய தினம் இடம்பெறவிருந்தது.

இந்நிலையில், குறித்த பகுதிக்கு முல்லைத்தீவு நில அளவை திணைக்கள அதிகாரிகள் நில அளவீட்டு பணிகளை மேற்கொள்ள சென்றபோது பிரதேச மக்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இதனையடுத்து அளவீட்டு பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.