அரசாங்கம் அதிகார பகிர்வு விடயத்தில் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் – மனோ வலியுறுத்தல்

நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கையுடனான நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை நேற்று (28) ஆராய்ந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக இலங்கைக்கு அடுத்த கட்ட கடனுதவியை வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு கிடைக்கப் பெறும் கடனுதவி 1.3 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்கிறது. இந்தநிலையில், ‘சமூக செலவினங்களுக்கான இலக்கை தவிர, ஏனைய அனைத்து இலக்குகளிலும் அளவு மட்டத்தை இலங்கை அடைந்துள்ளது’ என்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா தெரிவித்துள்ளார்.

‘இலங்கையின் சீர்திருத்தங்கள் பலனளிக்கின்றன. பொருளாதார மீட்சி குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது’.
‘பணவீக்கம் குறைவாகவே உள்ளதுடன் வருவாய் அதிகரித்து வருகிறது’. ‘பொருளாதார மீட்சி 2025ஆம் ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்று சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா தெரிவித்துள்ளார்.