அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் இடம் பெறவுள்ள அரச தலைவருக்கான தேர்தலில் தற்போதைய துணை அரச தலைவரும் அரச தலைவர் வேட்பாளருமான கமலா ஹரீஸை தான் ஆதரிப்பதாக ரஸ்ய அதிபர் விளமிடீர் பூட்டின் கடந்த வியாழக்கிழமை(5) ரஸ்யாவின் விளடிவொஸ்ரொக் நகரில் இடம்
பெற்ற கிழக்கு பிராந்திய பொரு ளாதார மாநாட்டில் பேசும் போது தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியை சேர்ந்த தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனே தனக்கு பிடித்தமானவர் எனவும் அவரின் பரிந்துரையில் தேர்தலில் போட்டியிடும் கமலாவை தான் அதிரிப்பதாகவும் பூட்டின் தெரிவித்தள்ளார்.
நான் நீண்டகாலமாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க தலைவர்களுடன் உரையாட வில்லை. அமெரிக்க அதிபரை தெரிவுசெய்வது அமெரிக்க மக்களின் விருப்பம் இதில் எனது விரும்பம் என்று எதுவுமில்லை. இருந்தபோதும் எனக்கு பிடித்தமானவர் பைடன் என கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும்போது அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிறம்பே ரஸ்யா மீது அதிக தடைகளை கொண்டு வந்தவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே உக்ரைனில் உள்ளக அரசியல் மோதல்கள் வலுத்து வருகின்றது. அதன் வெளிவிவகார அமைச்சர் டிமிற்ரி குலேபா கடந்த புதன்கிழமை(4) தனது பதவியை துறந்துள்ளார். அவருடன் மேலும் நான்கு அமைச்சர்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.



