சோமாலியாவில் இருந்து கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் பிரிந்து சென்ற சோமாலிலான்ட் என்ற நாடு இதுவரையில் அனைத்தலக அங்கீகாரத்தை பெறவில்லை. எனினும் அங்கு அமெரிக்காவின் தளம் அமைப்பதற்கு இடம்வழங்குவதன் மூலம் தமது நாட்டை அமெரிக்காவின் மூலம் அங்கீகரிக்க அந்த நாடு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப் படுகின்றது.
ரஸ்யாவின் TASS என்ற ஊடகத்திற்கு வழங்கிய செவ்வி யின் போதே அந்த நாட்டின் வொசிங்டனுக்கான பிரதிநிதி பசீர் கோத் கடந்த வியாழக்கிழமை(19) தெரிவிதர்துள்ளார்.
பேர்பரா துறைமுகப்பகுதி யில் அமெரிக்காவின் படைத்தளம் அமைப் பதற்கான அனுமதியை வழங்குவதன் மூலம் எமது நாட்டின் இறைமையை நாம் உறுதி செய்ய முடியும். அதற்கான அங்கீ காரத்தை அமெரிக்கா வழங்குமாக இருந்தால். அது இரு நாடுகளுக்கும் நன்மையானது.
சோமாலியாவில் இடம்பெற்ற உள்நாட்டு போரைத் தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு சோமாலிலான்ட் என்ற பகுதி சோமாலியாவில் இருந்து பிரிந்து சென்றிருந்தது. இந்த போரில் சோமாலியாவின் முன்னாள் இராணுவ ஆட்சியாளர் சயிட் பார் பதவியில் இருந்து அகற்றப்பட்டிருந்தார். எனினும் அதற்கு அனைத் துலக அங்கீகாரம் கிடைக்கவில்லை.
அங்கு தனியான அரசு அமைக்கப்பட்டு, பாதுகாப்பு படைகள் உருவாக்கப்பட்டுஇ பணமும் அச்சிடப்பட்டு வருகின்றது. எனினும் சோமாலிலான்ட் பகுதியை சோமாலியா தனது நாட்டின் ஒரு மாநிலமாகவே கருதி வருகின்றது. அண்மையில் எதியோப்பியாவுக்கு தனது கடற்கரையின் 20 கி.மீ நீளமான பகுதியை வழங்கும் உடன்பாடு ஒன்றை ஏற்படுத்த முற்பட்டபோதும் அதனை சோமாலியா தடுத்துள்ளது.