அனைத்துலக விசாரணை பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் – அனைத்துலக மன்னிப்புச் சபை

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தில் இருந்து சிறீலங்கா அரசு வெளியேறினால் சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை இன்று (27) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அனைத்துலக விசாரணை மூலமே சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான நீதியை பெறமுடியும்.

சிறீலங்கா அரசு உள்ளக விசாரணைகளின் மூலம் நீதியை வழங்கவும், இனநல்லிணக்கப்பாடுகளை மேற்கொள்ளவும் விரும்புவதாக தெரிவித்துள்ளது. ஆனால் சிறீலங்காவின் நீண்ட வரலாற்றில் உள்ளக விசாரணைகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்துள்ளதை நாம் காணலாம்.

இது பாதிக்கப்பட்ட மக்களை மிகவும் விரத்தியடைய வைத்துள்ளது. அவர்கள் நீதியை பெறுவதற்கு அனைத்துலக விசாரணை தேவை. இந்த ஆண்டும் ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் துன்புறுத்தப்பட்டதற்கான தகவல்கள் எம்மிடம் உண்டு என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.