அனைத்துலக நீதிமன்ற நீதிபதிகள் மீது அமெரிக்கா தடை

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு மற்றும் முன் னாள் பாதுகாப்பு அமைச்சர் கலன்ற் மீது பிடிவிறாந்து பிறப்பித்துள்ள நெதர்லாந்தை தளமாகக் கொண்ட அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் 4 நீதிபதிகள் மீது அமெரிக்கா தடை உத்தரவை விடுத்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் போரில் இதுவரை யில் 54,000 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப் பட்டுள்ளனர். 126,000 பேர் காயமடைந்துள்ளனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட போர்க்குற் றங்கள் தொடர்பில் இஸ்ரேலிய அதிகாரிகள் மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் கடந்த வருடம் நவம்பர் மாதம் பிடி விறாந்தை பிறப்பித்திருந்தது.
அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்ட நான்கு நீதிபதிகளில் இருவர் முன்னர் ஆப் கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டவர்கள். அவர்கள் மீது அமெரிக்கா முன்னரும் அழுத்தங்களை பிரயோகித்திருந்தது. அமெரிக்காவின் அழுத்தங்கள் காரணமாக 2021 ஆம் ஆண்டு அந்த வழக்கு கைவிடப்பட்டிருந்தது.
அனைத்துலக குற்றவியல் நீதமன்றத்தின் தலைவர் கரீம் கான் மீதும் அமெரிக்கா கடந்த பெப்ரவரி மாதம் தடை விதித்திருந்தது. இதனிடையே இஸ்ரேலின் மீது நடவடிக்கை எடுத்தால் அனைத்துலக நீதிமன்றத்தில் இருந்து பிரித்தானியா விலகும் என பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரோன் அனைத் துலக நீதிமன்றத்தின் பிரதம நீதிபதி கானை எச்சரித்ததாக பிரித்தானியாவின் நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.