அதிக வாக்குகள் பெற்றதால் நம்பிக்கையில் நாம் தமிழர் கட்சி – திருமாவளவனும் வெற்றி பெற்றார்

இந்தியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழகத்தில் இரு பெரும் திராவிட கட்சிகளுடன் தனித்துப் போட்டியிட்ட சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி ஏறத்தாழ 4 விகித வாக்குகளை பெற்றுள்ளது.

நிதிவளம் இன்றி தமிழ் மக்களின் மேல் நம்பிக்கை வைத்து போட்டியிட்ட அதன் வேட்பாளர்கள் பல இடங்களில் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் வந்துள்ளது அதிக கவனத்தை பெற்றுள்ளது.

உதாரணமாக காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட 26 வயதான த. சிவரஞ்சனி 62 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று மூன்றாவது நிலைக்கு வந்துள்ளார். தி.மு.க மற்றும் ஆளும் அ.தி.மு.க ஆகிய கட்சிகளுடன் அவர் போட்டியிட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

50 விகிதம் பெண் வேட்பாளர்கள் உட்பட இளம் தலைமுறையினரை களமிறக்கிய நாம் தமிழர் கட்சி ஏறத்தாழ 15 இலட்சம் வாக்குகளை தனதாக்கிக் கொண்டது. எனவே எதிர்வரும் காலங்களில் பெரும் திராவிடக் கட்சிகளுக்கு அது சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

thirumanalan அதிக வாக்குகள் பெற்றதால் நம்பிக்கையில் நாம் தமிழர் கட்சி – திருமாவளவனும் வெற்றி பெற்றார்இதனிடையே, சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோல். திருமாவளவன் பலத்த இழுபறிகளுக்கு மத்தியில் ஏறத்தாள 7 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.