அணுவாயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் – பூட்டீன்

ரஸ்ய மக்களும், நாடும் வெளிநாடுகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன. அதில் இருந்து நாம் எம்மை பாதுகாப்பதற்கு அணுவாயுதங்களைக் கூட பயன்படுத்துவதற்கு ரஸ்யா ஒருபோதும் தயங்காது என ரஸ்ய அதிபர் விளிமிடீர் பூட்டீன் கடந்த வியாழக்கிழமை(29) தனது நாட்டு மக்களுக்கு ஆற்றிய வருடாந்த உரையில் தெரிவித்துள்ளார்.

ரஸ்யா ஐரோப்பாவில் மிகப்பெரும் பொருளாதாரமாக வளர்ந்துள்ளது. நாம் உலகின் பொருளாதார நாடுகளில் ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளோம்.  ஜி-7 நாடுகளை விட நாம் பொருளாதார வளர்ச்சியில் முன்னனியில் நிற்கின்றோம்.

நேட்டோ தனது படையினரை உக்ரைனுக்கு அனுப்பினால் மிகப்பெரும் அனர்த்தங்களை அவர்கள் சந்திக்க நேரிடும். உக்ரைனைபோல பல ஐரோப்பி நாடுகள் மாற்றமடையும்.

மேற்குலக நாடுகள் உக்ரைன் போரை காரணமாக வைத்து ரஸ்யாவுடன் திரைமறைவு போரை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் நேரிடையாக மோதும் போது மனித குலத்தை நாசம் செய்யும் ஆணுவாயுதப்போராக அது மாறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.