அணிசேரா நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி ரணில் இன்று உரை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அணிசேர நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.

உகண்டாவின் கம்பாலா நகரில் இன்றும், நாளையும் அணிசேரா நாடுகளின் 19 வது அரச தலைவர்களின் மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று சுவிஸர்லாந்தில் இருந்து உகண்டாவின் கம்பாலா நகருக்கு சென்றார்.

கூட்டு உலக அபிவிருத்திக்காக ஒத்துழைப்புகளை விரிவுப்படுத்திக்கொள்ளல் என்பது இம்முறை மாநாட்டின் தொனிப் பொருளாகும்.