உலகளாவிய ரீதியில் எம்பொக்ஸ் என்ற குரங்கம்மை தற்போது வேகமாகப் பரவி வரும் நிலையில் இலங்கையில் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றில் அதிகபடியான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
குரங்கம்மை நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் அதனை உலக பொது சுகாதார அவசரகால நிலையாக பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.