ஃபெங்கல் புயல் எதிரொலி: சென்னை விமான நிலைய சேவைகள் நிறுத்தம்!

வங்கக்கடலின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் ஃபெஞ்சல் புயல் இன்று மாலை புதுவைக்கு அருகே கரையை கடக்கும்   என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இந்த புயலால் 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து  சென்னை விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் இன்று (30.11.2024) இரவு 7 மணிவரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.