ஹொங்கொங் பகுதியில் அமெரிக்க கப்பல்கள் பயணிக்கத் தடை

ஹொங்கொங் விவகாரத்தில் அமெரிக்காவின் மசோதாவுக்கு பதிலடி அளிக்கும் வகையில் ஹொங்கொங்கில் அமெரிக்க கடற்படை பயணிப்பதற்கு சீனா தடை விதித்துள்ளதுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “சீனா மீதான அமெரிக்காவின் காரணமில்லாத சமீபத்திய நடவடிக்கைக்கு எதிராக ஹொங்கொங் கடற்பகுதியில் அமெரிக்க கடற்படைகள் பயணிப்பதற்கு தடை விதிக்க சீன அரசு முடிவு எடுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங் நடக்கும் போராட்டம் தொடர்பாக எந்த நாடும் தலையிட வேண்டாம் என்று சீனா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தது. இதனிடையே அமெரிக்கா, ஹொங்கொங் விவகாரத்தில் போராட்டக்காரர்களுக்கான ஆதரவு நிலைப்பாட்டைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவான மசோதா ஒன்றில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அந்த மசோதவில் ஹொங்கொங் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய அந்நாட்டு போலீஸாருக்கு கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் குண்டுகள், பெப்பர் ஸ்பிரே ஆகியவற்றை ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்தச் செயலை உள் நோக்கம் கொண்டது என்று சீனா முன்னரே விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.