கடந்த 7 ஆம் நாள் ஹமாஸ் நடத்திய தாக்குதலால் பொதுமக்கள் உயிரிழந்ததை தொடர்ந்து இந்தியா ஹமாஸை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் முன்வைத்துள்ளதாக இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் நயோர் கிலோன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் பல மட்டங்களில் இருந்து இது தொடர்பான கோரிக்கைகள் இந்திய தரப்பிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு இது தொடாபில் நாம் இழுத்தங்களை மேற்கொள்வோம். இது தொடர்பில் இந்தியாவுடன் முன்னரும் பேசியிருந்தோம். காசாவில் இடம்பெறும் குண்டு வீச்சக்கள் மத்திய கிழக்கில் நாம் தப்பி வாழ்வதற்கான நடவடிக்கை. அங்கு எம்மை சுற்றி இருப்பவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.
நாம் பலவீனமானவர்களாக இருந்தால் எமது வாழ்க்கை முடிந்துவிடும். ஹமாஸ் அமைப்பிற்கான ஆயுதங்களையும், நிதி உதவிகளையும் ஈரான் மேற்கொண்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 7 ஆம் நாள் இடம்பெற்ற தாக்குதலை தொடாந்து ஹமாஸின் நடவடிக்கையை கண்டனம் செய்த முதல் நாடாக இந்தியாவே உள்ளது. மேற்குலகம் தவிர்ந்த ஏனைய நாடுகள் கண்டனம் என்ற சொல்லை பயன்படுத்தவில்லை. ஹமாஸ் மேற்கொண்ட படுகொலைகளை கண்டித்த இந்தியா 3000 இற்கு மேற்பட்ட சிறுவர்களை இஸ்ரேல் படுகொலை செய்தபோதும் இஸ்ரேல் அரசை கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.