ஸ்ரீலங்காவில் 24 மணி நேர மோட்டர் சைக்கிள் ரோந்து!

பண்டிகை காலத்தை முன்னிட்டு 24 மணி நேர ரோந்து நடவடிக்கையில் 200 க்கும் மேற்பட்ட சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகளும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

பண்டிகை காலத்தை முன்னிட்டு சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்காக பொலிஸார் இன்று முதல் கொழும்பில் மோட்டர் சைக்கிள் ரோந்து நடவடிக்கையை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த 24 மணி நேர ரோந்து நடவடிக்கையில் 200 க்கும் மேற்பட்ட சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகளும் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர். இந்த மோட்டார் ரோந்து நடவடிக்கையானது பொது இடங்கள், மத வழிபாட்டு இடங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு அருகில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை கண்டி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களிலும் இத்தகைய ரோந்து நடவடிக்கையில் முன்னெடுக்கப்படவுள்ளன” குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகை காலங்களின் போது விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யுமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

திடீர் இராணுவக் குவிப்பால் மக்கள் மத்தியில் அச்ச உணர்வு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply