காசா பகுதியில் உள்ள வைத்தியசாலை மீது இஸ்ரேலிய வான்படையினர் மேற்கொண்ட குண்டு வீச்சினால் 800 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குண்டு தாக்குதலை தொடர்ந்து உலகம் எங்கும் வாழும் முஸ்லீம் மக்கள் அதிக அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்ததுடன், பல நாடுகளில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஈரான் 3 நாட்கள் துக்கதினம் அறிவித்துள்ளது.
அம்மானில் இடம்பெறவிருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பை நிறுத்திவிட்டு பலஸ்தீன அதிபர் மக்மூட் அப்பாஸ் நாடு திரும்பியுள்ளதுடன், ஜோடானின் அதிபரும் ஜோ பைடனை சந்திக்க மறுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை உடனடியாக கூட்டுமாறு ரஸ்யாவும், ஐக்கிய அரபு எமிரேற்ஸ்சும் கோரிக்கை விடுத்துள்ளன.