வேலையில்லாப் பட்டதாரிகளின் தொடரும் போராட்டம் – ஹஸ்பர் ஏ. ஹலீம்

நாட்டின் பொருளாதார நெருக்கடி ஒரு பக்கம் இருக்க இலங்கையில் வேலையில்லா பட்டதாரிகளின் நிலமை ஒரு பக்கம் அரசாங் கத்துக்கு சவாலாக உள்ளது. இந்த  நிலையில்   கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகள் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி யும் இலங்கையில் தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் நெருக் கடிகளுக்கு முகங்கொடுக்கவுள்ளனர்.

unnamed 4 வேலையில்லாப் பட்டதாரிகளின் தொடரும் போராட்டம் - ஹஸ்பர் ஏ. ஹலீம்

திருகோணமலை, மட்டக்களப்பு, அம் பாறை போன்ற மாவட்டங்களில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் இருந்து தங்களது பட்டப்படிப்புக்களை முடித்து விட்டு அரச துறையில் தொழில்களை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த பட்டதாரிகளுக்கு இதுவரையில் எந்த ஒரு வேலைவாய்ப்புக்களும் கிடைக்காத கார ணத்தினால் அவர்கள் பல்வேறுபட்ட வீதி போராட்டங்கள் மற்றும்  தொடர் போராட்டங்கள் ஊடாக தமக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்ற  கோரிக்கைகளை முன்வைத்தும் வருகின்றனர்.

ஆனால் தற்போதைய அரசாங்கம் வேலை

யில்லாப் பட்டதாரிகளுக்கான அரச துறையில் நியமனங்கள் வழங்குவது தொடர்பில் பெருமள வில் கரிசனை காட்டவில்லை என்பது புலனாகிறது.

அத்துடன் அரச பல்கலைக்கழகங்களில் பட்டங்களை முடித்தும் வீட்டில் பலர் தனியார் துறையை விரும்பாத நிலையில் முடங்கிக் கிடக்கின்றனர். அதிலும் ஆண்களை விட பெண்களின் தொழிலற்ற வீதம் அதிகரித்து காணப்படுகிறது.

unnamed 3 வேலையில்லாப் பட்டதாரிகளின் தொடரும் போராட்டம் - ஹஸ்பர் ஏ. ஹலீம்

அண்மையில் வேலையில்லாப் பட்டதாரி கள் சங்கம் ஊடாக மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்னால் 19  நாட்கள் தொடர்போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் ஒரு நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்புக்கு விஜயம் செய்த வேளை, வேலையில்லாப் பட்டதாரிகள் வீதி ஊர் வலமாக சென்று மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

இது தவிர திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வேலையில்லாப் பட்டதாரிகள், கிண்ணி யாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பு  ஒன்றின் மூலம் அரசாங்கத்திடம்   தங்களுக்கு நியமனங்களை வழங்க வேண்டும் என்ற  கோரிக்கையை முன்வைத்தனர்.

அரசியல்வாதிகள் நாடாளுமன்ற உறுப் பினர்கள் ஊடாக கோரிக்கை விடுத்த போதிலும் சரியான முடிவுகள் கிடைக்கவில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.

கோட்டாபய அரசாங்கம் ஆட்சியில் உள்ள போது 2019ல் அரச நியமனங்களை அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை வழங்கியிருந்த போதிலும் அதன் பின்னர் அரச துறையில் தற்போதைய அரசாங்கம் வேலையில்லா பட்ட தாரிகளுக்கான நியமனங்களை வழங்கவில்லை. இதனால் கடந்த ஐந்து வருடங்களில் சுமார் 50ஆயிரம் பட்டதாரிகள் நாடு தழுவிய ரீதியில்  தொழில் இன்றி உள்ளார்கள்.

unnamed 6 வேலையில்லாப் பட்டதாரிகளின் தொடரும் போராட்டம் - ஹஸ்பர் ஏ. ஹலீம்

தொழில்வாண்மையான பட்டதாரிகள் வைத்தியத் துறை, பொறியியல் துறையில் பல நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும் கலைத் துறை சமூக விஞ்ஞான பட்டதாரிகள் அரச துறையில் வேலைவாய்ப்பு பெறுவது கடினம்.  ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சைகளுக்கு  கலை துறையில் குறிப்பிட்ட சிலரே தெரிவாகின்ற போதிலும் மிகுதி பட்டதாரிகள் தொழில் இன்றி காணப்படுவதுடன் அரச துறை நியமனங்களை நம்பி 45 வயதை தாண்டிய நிலையில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரமல்ல ஏனைய  மாவட்டங்களிலும் உள்ளார்கள்.

அரச சேவை மக்களுக்கு வினைத் திறனுடன் வழங்க வேண்டும் என்ற அரச கொள்கை காணப்பட்டாலும் பல்கலைக்கழக  உள்வாரி வெளிவாரியான பட்டங்களை கற்று திறம்பட வெளியேறிய போதிலும் நியமனங்களை பெறுவது தற்போதைய சூழ்நிலையில் எட்டாக்கனியாகவே காணப்படுகிறது. அரசாங்கம் தேர்தலை இலக்காகக் கொண்டு பல திட்டங்களை செய்து வாக்குகளுக்காகத் திசை திருப்ப பல உத்திகளைக் கையாளுகின்ற போதிலும் வேலையில்லாப் பட்டதாரிகளை கவனத்திற் கொள்ளவில்லை. இதனால் சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் மிக மோசமாக பாரிய பின்னடைவுக்குள் தள்ளிவிடுகிறது.

தற்போதைய அரசாங்கத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக  அரசாங்க ஊழியர்களும் பல்வேறு துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.பலருக்கு மாதாந்த சம்பளம் பெற்றாலும் அதற்கு மேல் செலவு கடன்  என உளரீதியாக சிந்திக்க தூண்டுவதுடன் சமூக பொருளாதார தாக்கங்களை யும் ஏற்படுத்துகிறது.

திருகோணமலை மாவட்ட பட்டதாரிகள் அண்மையில் ஊடக சந்திப்பொன்றில்   இவ்வாறு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

“ எங்களது வேலையில்லாப் பிரச்சினையை அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் செவிமடுக்க வேண்டும்” இது தொடர்பில்  பாராளுமன்றத்தில் பேசுவதற்காக ஊர் பாராளுமன்ற உறுப்பினர் களையும் நாங்கள் நாடி உள்ளோம்.

இந்த அரசாங்கம் மிக விரைவில் எங்களது வேலையில்லாப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினையை சரியான முறையில் தீர்க்கா விடின் வீதிக்கு இறங்கிப் போராடுவோம். 900-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எந்தவிதமான வேலையும் இல்லாமல் எங்களது மாவட்டத்தில்  இருக்கிறார்கள்

நாம் வயது மூப்பை அடைந்து கொண்டிருக்கின்றோம்.  எங்களுக்கு சரியான வேலையை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கி றோம். 35 வயதுக்கு பிறகு நிறுவனங்களிலும்  வேலை கிடைப்பது மிகவும் கடினமாகும்..

உள்வாரி வெளிவாரி வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் என எவ்வித பாகுபாடும் இன்றி எங்களுக்கு வேலை வாய்ப்பினைப் பெற்று தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.

இலங்கை, பெண்ணுரிமை  பெண்களுக் கான பாதுகாப்பு என சகலதையும் வழங்கக்கூடிய ஒரு நாடு. அப்படியாக இருந்தும் எங்களுக்கு வேலை வாய்ப்பை  வழங்குவதற்கு கால அவகாசம் மிகவும் அதிகமாக இருக்கின்றது என தமது வேதனையை தெரிவித்துள்ளனர்.

கல்விக் கொள்கையில் மாற்றங்காண வேண்டும். அரசின் புதிய கொள்கை திட்டங்கள்,  வீதிக்கு இறங்கி போராட முடியாத கொள்கை களாக இருக்க வேண்டும். அப்போது தான் வேலையில்லா பட்டதாரிகளுக்கான சுபீட்சமான எதிர்காலம் கிட்டும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.