வெள்ளவத்தையில் சர்வதேச பாடசாலை புத்தக களஞ்சியம் ‘சீல்’ – பொலிஸ் அதிரடி

348 Views

வெள்ளவத்தையிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் களஞ்சியசாலை நேற்று பொலிசாரினால் அதிரடியாக சீல் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட களஞ்சியசாலையில் மத ரீதியான நூல்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்தே அதனைச் சுற்றிவளைத்து தேடுதல் நடத்திய பொலிஸார் அதனை சீல் வைத்துள்ளார்கள்.

குறிப்பிட்ட களஞ்சியசாலையில் சுமார் 15,000 நூல்கள் காணப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். குறிப்பிட்ட புத்தகங்கள் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்திருந்தது.

களஞ்சியசாலையை சீல் வைத்த பொலிஸார் அங்கிருந்த சில நூல்களை – அதன் உள்ளடக்கம் என்ன என்பதை அறிந்துகொள்வதற்காக எடுத்துச்சென்றுள்ளார்கள்.

Leave a Reply