வெளிநாடொன்றில் இரவை பகலாக்கிய விண்கற்கள்

705 Views

அவுஸ்திரேலியாவின் இரு மாநிலங்களில் விண்கற்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இரவை பகலாக்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

‘ஷுட்டிங் ஸ்டார்’ என அழைக்கப்படும் விண்கற்கள், ஒன்றுடன் ஒன்று மோதி அவ்வப்போது மின்னல் போன்ற வெளிச்சத்தை உருவாக்குவது உண்டு.

அந்த வகையில் வெள்ளிக்கிழமை இரவு அவுஸ்திரேலியாவின் தஸ்மானியா மற்றும் விக்டோரியா மாநில வான்பரப்பில் இந்த மின்னல்கள் தோன்றின.

பகல் போன்ற பிரகாசத்தை ஏற்படுத்திய இந்த அரிய நிகழ்வு குடியிருப்பு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.

இதனை உறுதி செய்துள்ள வல்லுநர்கள், உரசிக்கொண்ட விண்கற்களின் அளவு தெரியவில்லை என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Leave a Reply