வெடியரசன் கோட்டை தமிழர்களின் சொத்து- ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் போராட்டம்

யாழ்.நெடுந்தீவு வெடியரசன் கோட்டையைப் பௌத்த விகாரையாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையினை கண்டித்தும், கச்சத்தீவில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ்த் தேசிய முன்னணியின்  குழுவினர் வெடியரசன் கோட்டை  பகுதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை பெளத்த விகாரையுடன் தொடர்புபடுத்தி கடற்படை அமைத்த பதாகையையடுத்து குழப்பம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் தொல்லியல் திணைக்களம், கடற்படை ஆகியவற்றினரின் செயற்பாட்டை கண்டித்தும் வெடியரசன் கோட்டை தமிழரின் சொத்து என வலியுறுத்தியும் போராட்டம் இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழர்களின் அடையாளங்களைச் சிதைத்து பௌத்தமயமாக்கும் நடவடிக்கையை நிறுத்து… வெடியரசன் கோட்டை தமிழர்களின் சொத்து… எனப் பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.