வீடுகளில் விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்துவீர் – பழ. நெடுமாறன்

320 Views

தமிழ் மக்கள் அனைவரும் 17 மற்றும் 18 ஆம் நாட்களில் தமது வீடுகளில் விளக்கேற்றி போரில் மரணித்த மக்களுக்கும் போராளிகளுக்கும் அஞ்சலிகளை செலுத்த வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மக்கள் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகியோரின் நினைவு பதினொன்றாம் ஆண்டு நிகழ்ச்சி மே 17-18 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கிறது.

கொரோனா தொற்று நோய் உலகமெல்லாம் பரவியிருக்கிற வேளையில் வழக்கம் போல் இந்நிகழ்ச்சியை நடத்த இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே அவரவர்கள் வீடுகளில் இருந்தவாறே அந்த நாட்களில் மாலை 6 மணிக்கு விளக்கு ஏற்றி வீர வணக்கம் செலுத்தும்படி உலகத் தமிழர்களை வேண்டிக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply