வீகர் முஸ்லிம்கள் மீது வன்முறை – சீன அதிகாரிகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தடை  

சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் வாழும் சிறுபான்மை வீகர் முஸ்லிம்கள் மீது, சீனா மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக குற்றம்சாட்டி சீன அதிகாரிகள் மீது பல மேற்கத்திய நாடுகள் தடைகளை விதித்திருக்கின்றன.

சீனாவின் வட மேற்குப் பகுதியில் இருக்கும் ஷின்ஜியாங் பகுதியில் வீகர் இஸ்லாமியர்களை ஒரு முகாமில் அடைத்து வைத்திருக்கிறது சீனா. அம்முகாமில் அவர்கள் சித்திரவதை செய்யப்படுவதாகவும், கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுவதாகவும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சியாக, சீன அதிகாரிகள் மீதான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

சீனாவும் ஐரோப்பிய அதிகாரிகள் மீது தடைகளை விதித்துள்ளது.