விவசாயிகள் போராட்டம் குறித்து இந்திய அரசிடம் கேள்வி எழுப்புக -போரிஸ் ஜான்சனிடம்  கோரிக்கை

446 Views

இந்திய விவசாயிகள் போராட்டம் பற்றிய தமது கவலைகளை இந்தியத் தரப்புக்கு தெரிவிக்குமாறு ஐக்கிய குடியரசு பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அனுப்புவதற்கான கடிதத்தை பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாரித்து வருகின்றனர்.

விவசாயப்பொருட்கள் வர்த்தகம், ஒப்பந்த விவசாயம், அத்தியாவசிய பொருட்களை ஒன்றிய அரசின் 3 விவசாய சீர்திருத்த சட்டங்களையும், மின்சார மசோதாவையும் எதிர்த்து இலட்சக்கணக்கான விவசாயிகள் இந்தியத் தலைநகர் டெல்லியின் எல்லையில் கடந்த ஒரு மாதமாக போராடி வருகின்றனர்.

பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தன்மன்ஜீத் சிங் தேசி இது தொடர்பான வீடியோ ஒன்றை ட்வீட் செய்துள்ளார்.

“(பிரதமர்) போரிஸ் ஜான்சன் அடுத்த மாதம் இந்தியாவுக்குச் செல்வதற்கான ஒப்பந்தமும் நடைமுறைகளும் திட்டமிடப்பட்டு வரும் நிலையில், இந்திய விவசாயிகள் போராட்டம் பற்றிய பிரதமரது புரிதலை தெளிவுபடுத்துமாறும், இந்த பெரிய பிரச்சனையை விரைவில் தீர்த்து வைக்கப்படும் என்ற நம்பிக்கையை இந்திய பிரதமர் மோடியிடம் எழுப்புமாறு ஜான்சனிடம் கோரும் கடிதம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

இந்திய வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்சனை உள்நாட்டு பிரச்சனை என்றாலும், ஐக்கிய முடியரசில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டங்களை அக்கறையுடன் கவனித்து வருவதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது என்று முன்னதாக தன்மன்ஜீத் சிங் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply