விவசாயிகள் போராட்டத்தை சாடும் ஆர்.எஸ்.எஸ்…

இந்தியாவிற்கு எதிரானவர்கள்தான் தங்கள் ஆதாயத்திற்காக டெல்லியில் போராடிக்கொண்டிருப்பதாக இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. கடும் குளிர், வெயிலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ், இது போன்ற நீண்ட போராட்டங்களை யாரும் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளது.

மேலும் ஜனநாயகத்தில் அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளதாகவும் ஆனால் நாட்டுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது.