விபத்துக்குள்ளான கப்பலை மீட்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு வைகோ கடிதம்

83 Views

பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெறியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலளார் வைகோ  கடிதம் எழுதியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். விபத்தில் சிக்கிய இந்தக் கப்பலில் 306 இலங்கை அகதிகள் பயணித்துள்ளனர். 40க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெண்களும் இருப்பதாகத் தெரிகிறது.

கப்பல் சேதமடைந்து உள்ளதால் எந்த நேரத்திலும் மூழ்கும் அபாயம் உள்ளது. அக்கப்பலில் பயணித்தவர்கள் தங்கள் உயிர்களைக் காக்கப் போராடி வருகின்றார்கள்.

கப்பல் தொடர்பு எண் 870776789032. எனவே, இந்திய பாதுகாப்புத் துறையுடன் தொடர்புகொண்டு, கடற்படை மீட்புக் கப்பலை அனுப்பி, விபத்துக்குள்ளான பயணிகளை காப்பாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், குறித்த கப்பலையும் அதில் உள்ளவர்களையும்  சிங்கப்பூர் கடற்படை மீட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply