வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல் முனைவின் இறுதிநாள்

119 Views

வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் செயல் முனைவின் இறுதிநாள் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது.

வடக்கு கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தர வேண்டும் என்ற 100 நாள் செயலமர்வு வடக்கு கிழக்கு ஒருங்கணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

அதன் இறுதி நாளான இன்று வடக்கு கிழக்கு தழுவி இன்று காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது. பெண்கள் வாழ்வுரிமைக்கழகத்தின் பணிப்பாளர் வாசுகி வல்லிபுரம் தலைமையில் பரந்தன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதன் போது, பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, 100 நாள் செயல்முனைவின் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டது.

Leave a Reply