விபத்தில் சிறீலங்கா காவல்துறை அதிகாரி பலி

439 Views

சிறீலங்காவின் தென்னிலங்கையில் நேற்று (27) இரவு இடம்பெற்ற விபத்தில் காவல்துறை சார்ஜன் தர அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

நரம்மால காவல்நிலையத்தை சேர்ந்த அதிகாரியின் உந்துருளி சிறீலங்கா இராணுவ கப் ரக வாகனத்துடன் கல்வன்குவ சந்தியில் மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்து தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தள்ளன.

Leave a Reply