விடுதலை செய்யப்படவேண்டிய அரசியல் கைதிகளின் விபரம் கையளிக்கப்பட்டுள்ளது – சுமந்திரன்

299 Views

சிறீலங்கா பிரதமர் மகிந்தா ராஜபக்சாவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம் ஏ சுமந்திரனுக்கும் இடையில் இடம்பெற்ற நேற்றைய (12) பேச்சுக்களின் போது விடுதலை செய்யப்பட வேண்டிய அரசியல் கைதிகளின் விபரங்கள் அடங்கிய ஆவணம் மகிந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கைதிகளின் விடுதலை தொடர்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சில கைதிகள் 10 வருடங்களாகவும், சிலர் 30 வருடங்களாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே அவர்கள் விடுதலைசெய்யப்பட வேண்டும்.

கைதிகளின் விபரம், அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள காலம், அவர்கள் மீதான வழக்குகள் தொடர்பான விபரங்களை மகிந்தா தன்னிடம் கேட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply