‘விடுதலைப் பயணத்தில் ஓயாது இறுதிவரை பணி செய்த தமிழீழ காவல்துறை’-அ.விஜயகுமார்

1,749 Views

இலங்கைப் பேரினவாத அரசுகளின் அடக்குமுறைகளுக்குள் சிக்குண்டு தமக்கான அடிப்படை உரிமைகளை இழந்து வாழ்வா சாவா என்ற அவல நிலையில் எம்மக்கள் வாழ்ந்து வந்தனர்.

1 4 1 'விடுதலைப் பயணத்தில் ஓயாது இறுதிவரை பணி செய்த தமிழீழ காவல்துறை'-அ.விஜயகுமார்

தமக்கான பாதுகாப்பின்மை, அதிகாரமின்மை, சுதந்திரமாகப் பெண்கள் வீதிகளில் நடமாட முடியாமை என்ற பதற்றமான சூழலிலே, தெருவில் தென்பட்ட இளைஞர்கள் யாவரையும் புலி என்று சுட்டுக் கொன்றும், காணாமல் ஆக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும், சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்தும் நீதி கேட்கச் சென்ற தாய், தமக்கை, தங்கை, துணையாள் ஆகியோரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியும் தனது ஆணவச் செருக்கையும், அதிகாரத் திமிரையும் பிரயோகித்ததன் விளைவாகவே பின்னால் எமக்கான ஒரு தனி தமிழீழம் அமைய வேண்டும் என்ற சிந்தனையில் படைத்துறை, அரசியல்துறை, நிதித்துறை, புலனாய்வுத்துறை என்ற பெரும் கட்டமைப்புகளுக்கு அடுத்து மக்களுக்கான பொது நிர்வாக சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற தேவை விடுதலைப்புலிகளின் தலைவரால் 1991ஆம் ஆண்டு உணரப்பட்டது.

தமிழீழவேங்கை: தமிழீழ காவல்துறை ஆரம்பிக்கபட்டு இன்றோடு இருபது ஆண்டுகள்.

அதன் பிரகாரம் புத்திஜீவிகள், தத்துவாசிரியர்கள், சமூக நலன்விரும்பிகள் ஆகியோருடனான ஆலோசனையின் பின்னர் “இலங்கை பொலிசாரின் ஆதரவோடு தமிழர்களின் வரலாறு கூறும் யாழ். பொது நூலகத்தில் இருந்த 97,000 புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்டதன்” பத்தாம் ஆண்டு நினைவு நாளான (01.06.1991) அன்று எங்கள் மக்களுக்கான காவல்துறையின் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன் பின்னர் அவ்வாண்டிலேயே 19.11.1991 அன்று விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான பா.நடேசன் அவர்களின் பொறுப்பில் தமிழீழ காவல்துறையின் முதலாம் அணி பயிற்சி முடித்து வெளியேறியது.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட எங்களது அன்றைய தொடக்க நாளிலே நாம் மக்கள் மத்தியில் எவ்வாறான ஒரு சேவை நோக்கம் உடையவர்கள் என்பதை மக்கள் உணர வேண்டும் என்பதற்காகவும், கடந்தகால கசப்பான, கனத்த நினைவுகளை மக்கள் மத்தியில் மீளவும் உருவாக்கிவிடக் கூடாது என்பதற்காகவும் ஓர் அமைதிக்கான வர்ணமாகவும், சர்வதேச ரீதியிலே அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், பார்ப்பவர் மனங்களில் பாதுகாப்பும் தமக்கான நீதியும் கிடைக்கும் என்ற சிந்தனையை தோற்றுவிப்பதற்காகவுமே இளம் நீல மேல் சட்டையும், கரும்நீல நீளக் காற்சட்டையும் அவரவர் பணிசார்ந்த இலச்சனைகளையும் நான் எனது மக்களுக்காக பணியாற்றப் புறப்படும் உங்களுக்கான சீருடையாக தெரிவு செய்தேன் என சீருடை வர்ணத் தெரிவு தொடர்பாக தேசியத் தலைவர் அவர்கள் தெரிவித்திருந்தார்.

தமிழீழ காவல் துறை - ஊழலற்ற ஒரு நடைமுறை அரசின் காவல் துறை - துருவி

பின்னாளில் அதுவே எம் மக்கள் மனதில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகி விட்டது. இவ்வாறு அன்றைய காலகட்டத்தில் ஆண், பெண் என்ற சமத்துவ நிலையை கருத்தில் கொண்டு காவல்துறையினுடைய முதலாவது அணியில் மகளீர் அணியும் தத்தமது பொறுப்புக்களில் பணிபுரியப் புறப்பட்டது. ஆரம்ப காலகட்டங்களில் சாதாரண தரம் வரை கல்வி கற்ற இளைஞர், யுவதிகள் மற்றும் சேவை மனப்பாங்குடைய இளைஞர், யுவதிகள் சட்ட ஒழுங்கு விதிமுறைகளை கற்கவும் மற்றும் சமூகத்திலே உள்ள மக்களுடைய தேவைப்பாடுகளுக்கேற்ப உருவாக்கப்பட்ட மகளீர் அணியானது, சிறுவர் அமைப்பு மற்றும் குற்றவியல் பிரிவு, போக்குவரத்துப்  பிரிவு,  உள்ளக  பாதுகாப்புப்  பிரிவு,  மக்கள்  தொடர்பு  சேவைப்  பிரிவு, காவல்துறை மருத்துவப் பிரிவு மற்றும் தொழில்நுட்பம் போன்ற இன்னும் பல தேவைப்பாடுகளுக்கு தெரிவு செய்து உள்ளவாங்கப்பட்டு, எமது கல்லூரிகளில் மூத்த உறுப்பினர்களால் பயிற்சி வழங்கப்பட்டு  வெளியேறினர்.

காலத்துக்குக் காலம் எமது விடுதலையின் பாதைகள் விரிவடைய, எமது காவல்துறை       உறுப்பினர்களும் சர்வதேச மட்டத்தினாலான தொழில்சார் நிபுணத்துவங்களை பெறவேண்டுமென்ற நோக்கில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டனர். ஒரு கட்டுக்கோப்பான காவல்துறை நிர்வாக சேவையில் மக்களிடம் எவ்வகையான  பிரச்சினைகள் உருவாகின்றதோ அவை யாவும் பொது நிர்வாகமான தமிழீழ காவல்துறையினரால்  சட்டத்தின்   முன் யாவரும்  சமமென்ற ரீதியில் அதிகார பாரபட்சம் அல்லது சொந்த பந்தம் என்ற உறவுகளுக்கு அப்பாற்பட்டு “தோழமைக்கு உரிமைகொடு, கடமை நேரங்களில் தவிர்த்துக்கொள்”என்ற  சிந்தனைகளுக்கு  அமைவாக வழக்குகள்  விசாரிக்கப்பட்டு தீர்ப்புகளும்  வழங்கப்பட்டு  வந்தன.

மக்களின் தேவைப்பாடுகள் பல்வேறுபட்ட கோணங்கள், பல்வேறுபட்ட வகையில் மாறுவது   போலவே, அவர்களுடைய குற்றச் செயல்களும் மாற்றம் அடையும் என்பதுதான் உண்மை.  ஆனாலும் எமது தமிழீழ காவல்துறையின் செயற்பாடுகள் சுயநலங்களை துறந்த பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்டு அமைந்தது. எவ்வாறெனில், பெண்கள் தமது ஆடை ஆபரண அலங்காரங்களை பணிநிலமைகளுக்கேற்ப மாற்றிக் கொண்டனர். திருமணமான,  திருமணமாகாத ஆண் பெண் உறுப்பினர்கள் மக்களுக்காக அயராது பணிபுரிந்தனர். அது   மட்டுமன்றி, ஆயுதங்களை கையாளுதல், வாகனங்களைச் செலுத்துதல், மக்களை ஒழுங்குபடுத்துதல், பிரச்சினையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதல், பாதுகாப்பளித்தல்    போன்ற விடயங்களிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாகவே இருந்தனர்.

சமாதான காலத்தில், 2002ஆம் ஆண்டு புலிகள் – அரசு  ஒப்பந்தத்தின் பிரகாரம் திறக்கப்பட்ட  A 9 நெடுஞ்சாலை எம் காவல்துறையின் சேவையையும், எம்மவர்களின் தேவைப்பாட்டையும்       அதிகரிக்கச் செய்தது. அரசு  – புலிகள் சூனியப் பிரதேசங்களுக்கு அப்பால் உள்வரும், வெளிச் செல்லும் வாகனங்களுடைய கண்காணிப்பு மற்றும் சந்தேகத்துக்குரிய நபர்களை       கண்காணித்தல், உறவினர்களை இணைத்தல்  போன்ற பெரும் பொது நிர்வாக சேவையை பொறுப்பேற்று திறம்பட நடாத்தியமை சர்வதேசத்தையும் வியக்கச் செய்தது.

கொடிய போரிலும் பட்டினிச் சாவைத் தவிர்த்த தமிழீழ அரசு ! #சுத்துமாத்துக்கள் #துரோகிகள் #இனப்படுகொலை #முள்ளிவாய்க்கால் #ஈழமறவர் #ஈழம் ...

வளர்ந்து வரும்  ஒரு  விடுதலை  இனத்தின்  மக்களுக்கான  ஒரு  நிர்வாக  அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை உலகம் எம்மிடம்தான் கற்றுக் கொண்டது. எவ்வாறெனின், பாடசாலைகளில் மாணவர்களுக்கான போக்குவரத்து, அடிப்படை சட்ட  திட்டங்களை  கற்பித்தல்  மற்றும்  மகளீர்,  சிறார்கள், குழந்தைகள்  தொடர்பான விவகாரங்களை   கையாளுதல்   அனர்த்த காலங்களில் எவ்வாறு உடனடியாக செயற்படுதல், துப்பாக்கிச் சூடு, ஆயுத மோதல்கள், விமானக் குண்டுவீச்சுக்கள் மற்றும் ஏனைய விபத்துக்களில் இருந்து  எம்மையும், பிறரையும் எவ்வாறு பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடாத்துதல். போதைவஸ்து மற்றும்  குடும்ப வன்முறைகள், துஸ்பிரயோகங்கள் தொடர்பான சமூகக் குற்றங்கள் ஏற்படாது   பாதுகாத்தல் தொடர்பான சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல், மற்றும் யுத்தக்   கைதிகளுக்கான மனிதாபிமான செயற்பாடுகளை முன்னெடுத்தல், மக்களின்  பாதுகாப்பு  மற்றும்  நாட்டினுடைய இரகசியங்களை பேணுதல் போன்ற விவகாரங்களையும் இலகுவாக      கையாள்வதற்கு  ஏற்றவகையில்  தமது நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

தமிழீழ காவல் துறை ! | EelamView

இவ்வாறு எம் தலைவனின் நேரிய சிந்தனையிலே சிறப்பாக பணியாற்றிய எம்மில் பலர்  கடமைகளின் போது தம் உயிர்களையும் தம் மக்களுக்காக தியாகம் செய்து கொண்டனர்.  அதுமட்டுமன்றி, சிறீலங்கா அரசு சமாதான ஒப்பந்தத்தை முறியடித்து போரை ஆரம்பித்த போது எமது அணிகள் எமது தாயத்தை பாதுகாக்கும் பணியில் அயராது செயற்பட்டன. நான்கு திசைகளும் சூழ மக்கள் ஒடுக்கப்பட்டனர். தரை, கடல், ஆகாயம் வழியான மும்முனைத் தாக்குதல்கள் எம்மக்கள் மீது தொடுக்கப்பட்டது.

தமிழீழ காவல் துறை - ஊழலற்ற ஒரு நடைமுறை அரசின் காவல் துறை - துருவி

இதன் விளைவாக முகமாலையிலிருந்து கிளிநொச்சி நோக்கியும், வடகிழக்கிலிருந்து முல்லைத்தீவு நோக்கியும், வட பகுதியின் தெற்கிலிருந்து கிளிநொச்சியை நோக்கியும் வடமேற்கிலிருந்து கிளிநொச்சி நோக்கியும் அதாவது முகமாலை, நாயாறு, ஓமந்தை, மன்னார் ஆகிய மாவட்டங்களிலிருந்து மக்கள் திரள்திரளாக இடம்பெயர வைத்தது, அக்   காலகட்டத்தில் மக்களைப் பாதுகாக்கும் பாரிய பணியை எமது தமிழீழ காவல்துறையே   பணியேற்றுச் செய்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளால்இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் செயற்படுத்தப்பட்ட தமிழ் ...

எமது துறை  உறுப்பினர்கள் ஊதியம் பெறுபவர்களாக இருந்தாலும், ஆயுதம் ஏந்திய தமிழீழ வீர விராங்கனைகளாகவே பணியாற்றினர். 2008 காலப்பகுதியில்   பிரதான நிர்வாக மையமான கிளிநொச்சி மோதல்களின்றி பின்வாங்கப்படவே  மக்களினுடைய நெருக்குவாரம் முல்லைத்தீவு நோக்கி நகரத் தொடங்கியது.

புலிகளும், மக்களும் அனைத்துக்  கட்டுமானங்களும் அல்லோல கல்லோலப்பட்டு சிதறிகிடந்த வேளையில் பெண்கள்,   முதியோர், வலுவிழந்தோர், சிறார்கள், மனநலன் பாதிக்கப்பட்டோர் உறவுகளை இழந்தோர்  என்ற பல வகையினரை தம் குடும்பங்களை விட்டு பிரிந்து சேவை என்ற நோக்கத்தோடு இறுதிவரை உழைத்து கடமையாற்றி கண்மூடிய எமது காவல்துறை ஆண் பெண் மாவீரர்களும் அகமரியாதைக்குறியவர்களே.

நாளுக்கு நாள் கைப்பற்றப்பட்ட எம்முடைய வாழ்விடங்கள் வளமிழந்து போக வருமோர் படை எமை காக்கவென்று ஐ.நா வை நம்பியிருக்க, உலக வல்லரசுகள் தோள்கொடுத்து நடாத்திய முள்ளிவாய்க்கால் மனிதப் படுகொலையில் சொந்த உறவுகளின் உயிரற்ற உடலங்களைக்கூட ஆறடி இல்லை எனினும் எட்டிய அளவில் புதைத்து   எம் விடுதலை மாவீர்களின் வித்துடல்களை அவர்களின் பெற்றோர் முகவரிதேடி கையளித்து   கம்பிகளாலும் கட்டைகளாலும் அவர்களின் கோப தாபங்களை எம்மீது காட்டிய    வேளைகளிலும் கடமையோடு  மக்கள் சேவகர்களாகவே எம்  துறை இறுதிவரை உறுதியோடு  ஓயாது பணி செய்தது.

தமிழின அழிப்பின் இறுதி சில மாதங்கள் இப்போது உலகளவில் ! #துரோகிகள் #இனப்படுகொலை #ஈழம் #சுத்துமாத்துக்கள் #தமிழர் #Tamil #Eelam #Traitors #TNAMedia #Genocide ...

மேன்மைதகு தமிழீழத்தின் தேசிய தலைவர் அவர்களின்  நெறிப்படுத்தலில் 16.05.2009  வரையும்  மக்களுக்கான எனது சேவையை அவர் எண்ணியதுபோல் செயலாற்றி, அவர் பாராட்டுதலையும்  பெற்ற மூத்த காவல்துறை  உறுப்பினர்  என்ற வகையிலும் இன்று தத்தமது பாதுகாப்பு நிமித்தம்  காரணமாக சொந்த மண்விட்டு வந்த மண்ணிலே அகதியாக வாழும் என் போன்ற  காவல்துறையின்  உறுப்பினர்கள் சார்பாகவும்  29 ஆம் ஆண்டில் காவல்துறையின் எமது     மக்களுக்கான சேவையினை வருங்காலமும் அறிந்து கொள்வதற்காகவும் இப்பகிர்வைப் பகிர்ந்து கொள்வதோடு, 18.05.2009 வரையும் எமது துறையை வழிநடாத்தி வீரச்சாவைத் தழுவிய    விடுதலைப்புலி மாவீரர்களையும் எங்களது காவல்துறை மாவீர்களையும் எமது காவல்துறை  பணியாளர்களையும் இத்தருணத்தில் நினைவு கூர்ந்து வீர வணக்கத்தைத்   தெரிவித்துக்கொள்வதோடு, எம் தேசம் உயிர்பெறும், ஓர்நாள் என் சந்ததி இக்கதை படிக்கும்  என்ற நம்பிக்கையில் இந்நாளை நினைவு கூருகிறேன்.

தமிழீழ காவல்துறையின்  முதன்மை  ஆய்வாளர் அ.விஜயகுமார் 

Leave a Reply