விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குக”-சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு

சுவிஸ் அரசானது தமிழீழ விடுதளைச்செயற்பாட்டாளருக்கெதிராகத் தொடுத்த வழக்கின் தீர்ப்பில், சாதாரண நியமங்களுக்குட்பட்டே அவர்கள் இயங்கினார்கள் எனவும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்தும் சுவிசின் பெலிசோனா நீதிமன்று தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து மீளவும் அரசு Federal நீதிமன்றில் வழக்குப்பதிய, கடந்தமாதம் அதையும் தள்ளுபடி செய்தது நீதிமன்று. இந்த வழக்கைத் தமது சக்திக்கு அப்பாற்பட்டுச் சுமந்தவர் மனித உரிமைச்,செயற்பாட்டாளர் விராஜ் மென்டிஸ், சுவிஸ் தீர்ப்பைத் தொடர்ந்து அவர் தற்போது கையிலெடுத்திருப்பது ஐரோப்பிய நீதிமன்றில் வழக்கொன்றைத் தொடுப்பதற்கான பாரிய முயற்சியாகும்.

வெறுமனே “விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குக” என வழக்குத்தொடுப்பதில் எவ்வித பயனுமில்லை. ஏனெனில் அவ்வாறு தடைநீக்கியபின் எமது இனத்தின்மீது நடாத்தப்பட்ட இன அழிப்பிற்கான நீதி என்ன என்பது எம்முன்னே நிற்கும் கேள்வியல்லவா.ஆதலால் வழக்கு கீழ்க்கண்டவாறு தொடுக்கப்படவுள்ளது.

A proposed legal action at the European court of justice..
The accusation is that by putting the LTTE on the terror list in 2006, the EU is culpable in undermining the ongoing peace process by triggering the ear of extermination against the Tamil people.

சுருங்கக்கூறின் ; “விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய நீதிமன்று விதித்த தடையின் காரணமாகவே, இவ்வளவு கொடூரமான தமிழின அழிப்பு சிங்களத்தால் இலகுவாக நிகழ்த்தப்பட்டது” என்ற அடிப்படையிலேயே வழக்குப்பதியப்படவுள்ளது. அதாவது விடுதலைப்புலிகள் மீது தடையில்லாதிருந்திருப்பின் தமிழின அழிப்பு நடைபெற்றிராது என்பதை வழக்கின் தீர்ப்பாகப் பெற்றால் அது பாரிய சாதகமாற்றங்களுக்கு வழிவகுக்கும்.

இந்த வழக்குப்பதிவிற்கான அடிப்படை நகர்வுகளுக்காக, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, யேர்மனி, சுவிஸ் ஆகிய நாடுகளிலிருக்கும் சட்டவல்லுநர்களும், அவர்களுக்கு உதவியாக இன அழிப்பின் சூட்சுமங்களை நன்கறிந்த ஆங்கிலமொழி பேசக்கூடிய தமிழ் இளம் சந்ததியினரையும் உலகெங்குமிருந்து திரட்டிவருகிறோம். அத்துடன் அனைவருக்குமான

பயணச்சீட்டுகள்,
தங்குமிடம் மற்றும் உணவு,
இருபது நபர்கள் இணைந்து பணியாற்றக்கூடிய அலுவலகம்,

ஆகியவற்றையும் ஒழுங்கமைத்துக்கொண்டிருக்கிறோம். இந்தச் செயற்றிட்டம், எதிர்வரும் சனவரி 2020 தொடக்கம் 2021 நடுப்பகுதிவரை நகரும் பாரிய செலவுகளுக்குட்பட்ட செயற்றிட்டமாகும். எனவே இச்செயற்றிட்டத்தில் இணைந்து பணியாற்ற விரும்பும் ஆங்கிலமொழியில் தேர்ச்சியுள்ள உறவுகளும், சுழற்சிமுறையில் அலுவலகப்பணியில் இணைந்து பணியாற்ற விரும்பும் இளையவர்களும் திரு.விராஜ் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தலாம்.

அதனிலும் மேலான அவசியமாக, இப்பணிக்கான நன்கொடை மற்றும் உதவிகளைச் செய்யக்கூடிய உறவுகளையும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து நிற்கிறோம். ஒருமித்த மக்கள் பலமின்றி இங்கே எதையும் செய்யவிலாது என்பதை நீங்கள் புரிந்து எம்மோடு கைகோர்க்குமாறு அன்புடனும் பணிவுடனும் வேண்டுகிறோம்.

நிதிப்பங்களிப்பை கீழுள்ள இணைப்பைச் சொடுக்கியும் வழங்கமுடியும். அனைவரது உதவிகளும் முறையாகப்பதியப்பட்டு வரவுசெலவு வெளியிடப்படும் என்பதையும் அறியத்தருகிறோம்.

Support Us