‘விக்கி’ தலைமையில் 4 கட்சிகள் இணைகின்றன: உடன்படிக்கை இன்று கைச்சாத்து

வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் தலைமையில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளுக்கிடையில் இன்று ஞாயிற்றுக்கிழமை புரிந்துணர்வு உடன்பாடு கைச்சாத்திடப்படவுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் கைச்சாத்திடவுள்ளன எனத் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் கைச்சாத்திடும் உத்தியோக பூர்வ நிகழ்வு இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சின்னம் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றனர் எனவும், இதுவரை எதுவித முடிவுகளும் எட்டப்படவில்லை எனவும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.