வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையில் பதற்றம்- பொலீசார் குவிப்பு

551 Views

மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ஆண்டிற்கான பாதீட்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கான சபை அமர்வு நடைபெற இருந்த நிலையில் அமைதியற்ற சூழ் ஏற்பட்டதன் காரணமாக சபை கால தாமதமின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள வாழைச்சேனை பிரதேச சபையானது அடுத்த ஆண்டிற்கான பாதீட்டு அறிக்கை கடந்த வாரம் சமர்பிக்கப்படவிருந்த நிலையில் சபை தவிசாளரினால் இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை தவிசாளர் சோபா ஜெயரஞ்சித்தின் தலைமையில் இன்று மீண்டும் சபை அமர்வு கூடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பதாக அமைதியற்ற சூழ் நிலை அங்கு உருவானது. சபை கூடுவதற்கு முன்பதாக அமைதியற்ற சூழ் நிலை அங்கு உருவானதால் பொலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தனர்.

சபை கூடுவதற்கு முன்பதாக சபை மண்டபத்தை விட்டு தவிசாளர் வெளியில் சென்றிருந்த வேளை நுழை வாயிலில் உப தவிசாளர் எதிர் கொண்டதாகவும் இதனை அடுத்து அந்த இடத்தில் அமைதியற்ற சூழ் நிலை இருவருக்கிடையில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சபை வளாகத்தில் அமைதியற்ற சூழ் நிலை இடம்பெ
பொலிசார் அமைதியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். குறித்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

இதேவேளை தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் இச் சம்பவம் தொடர்பாக தெரிவித்ததாவது, இன்று சபையில் நடந்த சம்பவம் கசப்பான சம்பவம் என்றும் 15-16 உறுப்பினர்கள் சபையில் இருந்த போது தவிசாளர் தொலை பேசி அழைப்பு வந்து தொடர்பாடல் மேற்கொள்ள சபையினை விட்டு வெளியேறினார்.

அவ் வேளை உப தவிசாளர் கடும் வேகத்தோடு சபையினுள் உள் நுழைந்ததை அவதானித்தேன். தவிசாளரை தாக்கிவிட்டு வந்ததையும் மேலாடை கிழிந்திருந்ததையும் அவதானித்தேன் என்றார்.

இச் சம்பவம் தொடர்பாக தவிசாளர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து ஊடகங்களுக்கு இவ்வாறு தமது கருத்தினை உப தவிசாளர் தர்மலிங்கம் யசோதரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

தமது ஆசனத்தையும் ஊழல் மோசடியையும் தவீர்ப்பதற்கு தவிசாளர் இவ்வாறு நடந்து இருந்திருக்கலாம் என்றார். தவிசாளர் சேபா ஜெயரஞ்சித்தினால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தமது மனைவி பிள்ளைகள் அச்சத்துடன் இருப்பதாகவும் தமக்குரிய பாதுகாப்பு வேண்டி பொலிசாரின் உதவியினை நாடவேண்டியுள்ளதாக உப தவிசாளர் கருத்து தெரிவித்தார்.

இது குறித்து தவிசாளரை தொடர்பு கொண்டபோது தான் சிகிச்சை பெற்று வருவதாகவும் கருத்து கூறுவதனை தவீர்த்துக் கொண்டார். வாழைச்சேனை பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.  மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் நேரில் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

Leave a Reply