வவுனியா -கோவிட் தடுப்பூசி பெற்ற 15 பேர் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதி

138 Views

வவுனியா, இராசேந்திரங்குளம் ஆடைத் தொழிற்சாலையில் கோவிட் தடுப்பூசி ஏற்றப்பட்ட 15 பேர் ஒவ்வாமை காரணமாக ஆடைத் தொழிற்சாலை சிகிச்சை கூடம் மற்றும் வவுனியா வைத்தியசாலையில் இன்று   அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்கு இராணுவத்தினர் ஊடாக சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன. இதன்போது 15 பேர் ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

PHOTO 2021 06 25 12 47 12 வவுனியா -கோவிட் தடுப்பூசி பெற்ற 15 பேர் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதி

அதில், வவுனியா, இராசேந்திரங்குளம் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் சிலர் தடுப்பூசி ஏற்றப்பட்ட நிலையில் ஒவ்வாமை காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்டவர்களில் பலர் உடல் நிலை சீர்வந்த நிலையில் வீடுகளுக்கும் திரும்பியுள்ளனர்.

இன்னும், சிலருக்கு ஆடைத் தொழிற்சாலையில் உள்ள சிகிச்சை கூடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply