வவுனியாவில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

378 Views

வவுனியா, ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை கடந்த பல மாதங்களாக வன்புணர்வு செய்து வந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை பொலிசார் தேடிவருவதுடன், அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் உறவினரான இளைஞர் ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, ஓமந்தை பெரியபுளியங்குளம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த யூலை மாதத்தில் இருந்து உறவினர் ஒருவரின் துணையுடன் இளைஞர் ஒருவர் பாலியல் வன்புணர்வு மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டதை அவதானித்த பெற்றோர் சிறுமியை விசாரித்த போது தனக்கு நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். இதனையடுத்து பெற்றோரால் ஓமந்தை பொலிசில் நேற்று மாலை செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக வன்புணர்வுக்கு உதவிய குற்றச்சாட்டில் உறவினரான 24 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிரதான சந்தேக நபரான 29 வயது இளைஞனை பொலிசார் தேடி வருகின்றனர்.

சிறுமி கர்ப்பம் தரித்துள்ள நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply