வவுனியாவில் சங்கிலி அபகரித்த திருடர்கள் பொதுமக்களால் நையப்புடைப்பு.

பாலமோட்டை பகுதியில் பெண் ஒருவரின் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று நபர்கள் அபகரித்துச் சென்ற போது இளைஞர்கள், பொதுமக்கள் துரத்தி பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

இன்று காலை 11.30 மணியளவில் வலயன்கட்டு பரிசங்குளம் பகுதியில் வீதியில் சைக்கிளில் சென்ற இளம் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அபகரித்து கோயில் குஞ்சுக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அப்பகுதி இளைஞர்களாலும், பொதுமக்களாலும் நையப்புடைக்கப்பட்டுள்ளனர்.
IMG fcdd1e14b9a84d49a8b823b5424d0030 V வவுனியாவில் சங்கிலி அபகரித்த திருடர்கள் பொதுமக்களால் நையப்புடைப்பு.

சங்கிலி அபகரித்துச் சென்ற நபர்கள் ஆண்டியா புளியங்குளத்தை சேர்ந்த முஸ்லிம் நபர்கள் எனவும் பரிசங்குளம் பகுதிக்கு மேசன் வேலைக்காக வந்தவர்கள் எனவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது. பொதுமக்களால் பிடிக்கப்பட்ட இருவரையும் தற்சமயம் ஓமந்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். IMG 411017ca08ca7150dd6b0af462c1d117 V வவுனியாவில் சங்கிலி அபகரித்த திருடர்கள் பொதுமக்களால் நையப்புடைப்பு.

தப்பித்து சென்ற நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேலதிக விசாரணைகளையும் ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply