வவுனியாவில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பதாதைகள் வைப்பு

கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பதாதைகள் வவுனியாவில் இன்று  வைக்கப்பட்டுள்ளது.

PHOTO 2021 05 12 16 58 58 1 வவுனியாவில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பதாதைகள் வைப்பு

கோவிட் 19 மூன்றாம் அலையின் தாக்கமானது வவுனியாவில் வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மக்கள் மத்தியில் இது தொடர்பான விழிப்புணர்வுகளை சுகாதார திணைக்களத்துடன் இணைந்து பல்வேறு அமைப்புக்களும் முன்னெடுத்துள்ளன.

அந்தவகையில், ‘கொரோனா நோயில் இருந்து எம்மை பாதுகாத்து கொள்வோம். பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிவோம்’ என பொறிக்கப்பட்ட பதாதைகள் வவுனியா புதிய பேருந்து நிலையம் மற்றும் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது.

PHOTO 2021 05 12 16 58 58 வவுனியாவில் கொரோனா தொடர்பான விழிப்புணர்வு பதாதைகள் வைப்பு

இதன் ஆரம்ப நிகழ்வில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் எம்.மகேந்திரன், வைத்தியர் லவன் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.