வவுனியாவில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

வவுனியா-செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இன்று அதிகாலை இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் உள்ள பிரதான வீதிக்கு முன்பாக இளைஞர் ஒருவரின் சடலம் வீதியில் காணப்பட்டமை தொடர்பாக பறயனாலங்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச் சம்பவத்தில் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த பா.நிரோஜன் வயது 35 என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாகவும் அவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த நபரின் சடலம் செட்டிகுளம் வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை அவ்வீதியால் பயணித்த வாகனங்கள் தாக்கிவிட்டு தப்பிச்சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.