தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வவுனியாவில் ஆரம்பமான நடைபயணம் இன்று (வியாழக்கிழமை) காலை நாவற்குழி சந்தியிலிருந்து ஆரம்பித்து நல்லூரில் உள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தை சென்றடைந்து அங்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், சிங்கள குடியேற்றங்களை நிறுத்துதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், இன அழிப்பு மற்றும் காணாமலாக்கபட்டவர்களை கண்டறிய சர்வதேச விசாரணை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியின் ஏற்பாட்டில் இந்த நடைபயணம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்குதமிழ் தூபியிலிருந்து தியாக தீபத்தின் உருவப்படம் தாங்கிய ஊர்தியுடன் இணைந்து கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகிய நடைபயணம், நேற்று நண்பகல் அளவில் நாவற்குழியைச் சென்றடைந்து அங்கு அஞ்சலி செலுத்தப்பட்டு நாவற்குழியிலிருந்து இன்று அதிகாலை ஆரம்பித்து நல்லூரைச் சென்டைந்துள்ளது.