தமிழர் தாயகப்பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரி சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதி வடக்கு கிழக்கு சகல மாவட்டங்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.
இதற்கான அழைப்பையும் போராட்டங்கள் நடைபெறும் நேரம் இடங்கள் என்பனவற்றை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் வெளியிட்டுள்ளனர்.
போரின் இறுதி நாட்களில் சிறீலங்கா படையினரிடம் சரணடைந்த குடும்பங்களில் இருந்த பல சிறுவர்களும், குழந்தைகளும் காணாமல்போயுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.